யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு | தினகரன் வாரமஞ்சரி

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணத்தில் ‘தனுரொக்’ வாள் வெட்டுக் குழுவின் தலைவர் தனுவின் மீது பட்டப் பகலில் நேற்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த தனு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வைத்தியரின் வாகனம் என அடையாளமிடப்பட்ட காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த தனுவை யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் இடைமறித்து நேற்று நண்பகல் துரத்தித் துரத்தி அருகிலிருந்த தனியார் கல்வி நிலையத்தில் வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சம்பவ இடத்தில் கார், வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

காரில் வைத்தியர் என்ற ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த கார் வைத்தியருடையது அல்ல என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சுண்டுக்குழி நிருபர்

Comments