முதல் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இஸ்லாமிக் ஃபினான்ஸ் | தினகரன் வாரமஞ்சரி

முதல் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இஸ்லாமிக் ஃபினான்ஸ்

கொமர்ஷல் லீசிங் அன்ட் பினான்ஸ் பீ.எல்.சி (CLC) நிறுவனத்தின் அங்கமான CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய நிதி நிறுவனமாகத் திகழ்வதுடன் தற்போது தெற்காசிய இஸ்லாமிய நிதியீட்டு அரங்கிலும் உயர்வான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. CLC இன் இஸ்லாமிய வணிகப் பிரிவின் (IBD) கீழ் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) விதிமுறைகளுக்கு உட்பட்டு இஸ்லாமிய நிதி அலகாக 2015இல் தொடங்கப்பட்ட CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ் நிறுவனம் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் இணையற்ற நிதிச் சேவைகளை வழங்குகிறது. 

CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஷரீஆ மேற்பார்வைக் குழு மற்றும் புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச அறிஞர்களைக் கொண்ட அர்ப்பணிப்பான உள்ளக ஷரீஆ ஆலோசகர்கள் மூலம் இணக்கத்துக்கு அவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. 

கடந்த ஐந்து ஆண்டுகளில் CLC இஸ்லாமிக் ஃபினான்ஸின் அபரிதமான வளர்ச்சியானது பல சாதனைகளால் பிரதிபலிக்கப்படுகின்றது.

குறிப்பாக, தெற்காசியாவில் அதன் நற்பெயரை மேன்மைப்படுத்திய தொடர் உயரிய விருதுகளின் வரிசை, மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கு அமைய அவசியமான பங்கிலாப விகிதங்களை விட அதிகமான இணையற்ற ஆதாயத்தை வழங்கும் தயாரிப்புகள், வளர்ந்து வரும் சொத்துத் தளம், நாடு முழுவதும் சேவை வலையமைப்பின் ஊடான புதுமையான தானியங்கி சேவை வழங்கல்கள் மற்றும் இஸ்லாமியர்கள், இஸ்லாமியர் அல்லாத அனைத்து குடிமக்களுக்கும் அதன் இலாபகரமான சேவைகளைப் பெற ஒரு திறந்த அழைப்பு. 

CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ் வென்ற தொடர்ச்சியான உயரிய விருதுகள் குறுகிய கால இடைவெளியில் அதன் வளர்ந்து வரும் நற்பெயர், இணக்க வலிமை மற்றும் இணையற்ற வாடிக்கையாளர் மீதான கவனம் ஆகியன இதற்கு சான்றாக அமைகின்றன.

CLC இஸ்லாமிக் ஃபினான்ஸ் Islamic Finance Forum of South Asia வில் (IFFSA- தெற்காசியாவில் இஸ்லாமிய வங்கியாளர்களுக்கான ஒரேயொரு வருடாந்த ஒன்றுகூடல்) தொடர்ச்சியாக விருதுகளை வென்றது.

Comments