Litro Gas க்கு (SLSI) SLS 1672 : 2020 சான்றிதழ் | தினகரன் வாரமஞ்சரி

Litro Gas க்கு (SLSI) SLS 1672 : 2020 சான்றிதழ்

இலங்கையின் சக்தித் துறையில் விவாதத்துக்கு இடமற்ற தலைவராக திகழும் Litro Gas Lanka Ltd மற்றும் Litro Gas Terminal Lanka (Pvt) Ltd என்பன இலங்கை கோவிட் -19நோய்த் தாக்கத்தால் முடக்கப்பட்டிருந்த வேளையில் தனது வாடிக்கையாளர்களுக்கு விதிவிலக்கான சேவையை வழங்கியிருந்தன. 

Litro Gas ஆனது கடமை என்ற சொல்லுக்கு அப்பால் இலங்கை வாழ் குடும்பங்களுக்கு தடையற்ற சேவை விநியோகத்தை வழங்குவதற்கான சவாலான பணியை போற்றத்தக்க வகையில் மேற்கொண்டது.

ஊரடங்குச் சட்டம் மற்றும் ஏனைய முடக்க செயற்பாடுகளை பொருட்படுத்தாது LPG உள்நாட்டு சமையல் எரிவாயு விநியோகமானது இக்காலப்பகுதியில் Litro Gas இனால் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்பட்டது. 

முடக்கக் காலப்பகுதியில் தனது 4மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு மாறாத சேவையினை பேணிய அதே வேளை Litro Gas ஆனது தனது சொந்த பாதுகாப்பு நெறிமுறைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் உலகத் தரத்தில் இருப்பதையும் உறுதிப்படுத்தி இருந்தது. 

அதன் சிறப்பான பாதுகாப்பு மட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் Litro Gas க்கு இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் (SLSI) SLS 1672 : 2020சான்றிதழானது வழங்கப்பட்டதுடன் இது நிறுவனங்களுக்கு SLSCOVID-19பாதுகாப்பு முகாமைத்துவ முறைமைகளுக்கான கோரிக்கைகளுக்கிணங்க வழங்கப்படுவதாகும். 

'SLSIஇன் இந்த மதிப்பான தரநிர்ணயத்தை பெற்ற அரசாங்கத்துக்கு சொந்தமான ஒரே ஒரு நிறுவனம் நாம் என்பது உண்மையிலேயே எமக்கான ஒரு மைல் கல்லாகும் ' என்று Litro Gas Lanka Ltd மற்றும் Litro Gas Terminal Lanka (Pvt) Limited, ஆகியவற்றின் தலைவரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான அனில் கொஸ்வத்த தெரிவித்தார். இது எமது பாதுகாப்பு தரங்களை மட்டும் பலப்படுத்தவில்லை. எமது பாதுகாப்பு முறைமைகளில் நாம் உயர் மட்ட தரத்தை பேணுவதையும் வலியுறுத்துகிறது. 

Comments