கைவிடப்பட்ட நிலையில் கண்டி, ஹந்தான உடுவலை வீட்டுத்திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

கைவிடப்பட்ட நிலையில் கண்டி, ஹந்தான உடுவலை வீட்டுத்திட்டம்

கண்டி ஹந்தான உடுவலை தோட்டத்தில் வீட்டு வசதிகளற்ற குடும்பங்களில் தேர்தெடுக்கப்பட்ட இருபத்தி ஐந்து குடும்பங்களுக்கு ஏழு பேர்ச் காணியில் வீடுகளை கட்டுவதற்க்கு இரண்டாயிரத்து பதினேழாம் ஆண்டு உடுவல தோட்டத்தில் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக இதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் நடந்தன. கடந்த பதினெட்டு மாதகாலமாக கடடுமானப் பணிகள் முடங்கிப்போயுள்ளன. வீட்டு கட்டுமான பணிக்காக அரசு ஐந்து இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டு வீடுகளை தாமாக அமைத்துக்கொள்ள தொழிலாளர்களுக்கு வசதியளிப்பதே இந்த வேலைத்திட்டம்.

இவ்வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கட்டம் முடிவடைந்ததும் அதிகாரசபை அதற்கான பணத்தை செலுத்தும். இதுதான் இவ் வீடமைப்புத் திட்டத்தின் அடிப்படை. எனினும் கட்டுமான பணிகள் பல உப கட்டங்கலாக பிரிக்கப்பட்டு. ஒவ்வொரு கட்டடத்திற்கும் குறித்த கட்டுமானப் பணிகள் முடிய அதற்கான பணம் அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட வேண்டும். முதலாம் இரண்டாம் கட்டங்களின் பின்னரான பணம் கடந்த ஒன்றரை வருடகாலமாக வழங்கப்படவில்லை. வீட்டு வசதியற்ற தொழிலாளர்கள் வீடு கிடைக்கும் மகிழ்ச்சியில் கடன உடன்பட்டு வீடுகளை கட்ட ஆரம்பித்தனர். இடைநடுவில் கட்டுமாானம் இடை நிறுத்தப்பட்டமை குறித்து கவலை தெரிவிக்கின்றனர். அரசு நிர்வகிக்கும் ஜனவசம தோட்டம் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் தான் வேலை கிடைக்கின்றது. குறைந்ந வருமானத்தில் வாழ்க்கை வணடியை ஓட்டி கொன்டிருக்கும் இவர்களுக்கு மேலும் கடன்படுவது சாத்தியமல்ல.கட்டுமானம் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதால் மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றது. கட்டுமான பணிக்காக கொண்டுவரப்பட்ட கட்டுமானப் பொருட்கள் விரயமாகின்றன. இந்த வீடுகளுக்கான தொழிலாளர் குடும்பங்களைத் தேர்ந்தெடுக்கும்போது தோட்டத்தில் தொழில் செய்யாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை என தோட்டத் தொழில் இல்லாதவர்கள் கூறுகின்றனர். இத்தோட்டப் பகுதிகளில் தோட்டத் தொழிலில் ஈடுபடுபவர்கள் குறைவு. கண்டி நகர் அருகில் இருப்பதால் வெளி வேலைகளுக்காக பலர் வெளியே சென்று விடுகின்றனர்.

ஆர்.நவராஜா
(படங்கள்: தெல்தோட்டை தினகரன் நிருபர்)

Comments