OPPO கைக்கடிகாரம், OPPO Enco W51 ஹெட்போன்கள் இலங்கையில் வெளியீடு | தினகரன் வாரமஞ்சரி

OPPO கைக்கடிகாரம், OPPO Enco W51 ஹெட்போன்கள் இலங்கையில் வெளியீடு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட OPPO கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்த OPPO Sri Lanka தயாராக உள்ளது. நீர் உட்புகாதது என்பதுடன், Google இன் Wear OS இனால் இயக்கப்படுகிறது. அத்துடன் OPPO Enco W51ஆனது, OPPO ஒலியியலின் கீழான, இரைச்சலை இல்லாமல் செய்யும் (active noise cancellation -ANC) முதலாவது தரம் மிக்க வயர்லெஸ் ஹெட்போனையும் அறிமுகப்படுத்துகிறது. 

GoogleTM apps மற்றும் அதன் சேவைகளின் முழு தொகுப்பையும், தங்கள் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட முறைமைகளுக்கு இடையில் ஒரே தடவையில் தங்கு தடையின்றி எளிதாக மாற்ற விரும்பும் எவருக்கும் OPPO Watch சிறந்ததாக அமைகின்றது. OPPO Enco W51ஹெட்ஃபோன்கள் குறிப்பாக இளைஞர்களை மையப்படுத்தியது என்பதோடு, ஒரே தடவையில் தங்கு தடையின்றி கிட்டத்தட்ட அனைத்து வாடிக்கையாளர் பிரிவினருக்கும் ஏற்றதாக அமையவுள்ளது. 

வாழ்க்கைக்காக வடிவமைக்கப்பட்ட மற்றும் மிக உயர்ந்த அனுபவத்திற்காக வடிவமைக்கப்பட்ட OPPO Watch ஆனது, 46மிமீ அகலத்தை கொண்டதோடு, eSIM/ LTE அல்லது WiFi இணைப்பை கொண்டதாக காணப்படுகிறது. இது 6000-series அலுமினிய alloy சட்டத்தைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், stunning Black (கறுப்பு) அல்லது Glossy Gold (தங்க நிறம்) ஆகிய நிறங்களில் வெளிவருகிறது. 

உடற்பயிற்சிகளின் கண்காணிப்புக்கு மேலதிகமாக, குரல் பயிற்சியளிக்கும் ஐந்து பயிற்சி முறைகள் மற்றும் உடற்பயிற்சி இலக்குகளை மேம்படுத்துவதற்குமாக OPPO Watch வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உடற்தகுதி ஓட்டம், கொழுப்பை குறைக்கும் ஓட்டம், வெளியில் நடத்தல், வெளியில் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவற்றை இதில் குறிப்பிடலாம். 

Comments