அமைதிக் காற்று கிட்டட்டும் | தினகரன் வாரமஞ்சரி

அமைதிக் காற்று கிட்டட்டும்

நித்தம் நித்தம்
ஏன் அழுகின்றாய்
பித்தம் பிடித்தவன் போல்
ஏன் தவிக்கின்றாய்
உத்தம குணங்கள்
உனைவிட்டுப்
போனதால் அன்றோ
உனக்குள் இந்த
ஆறாக் கலக்கம்
தீறா மயக்கம்
பெற்றெடுத்த தாயை
உதாசீனம் செய்தால்
கற்று வாழ வழிசொன்ன
தந்தையை அவமதித்தாய்
உற்ற வழி உரைத்த
ஆசிரியர் சொல் மறந்தாய்
கண்போன போக்கில்
நீ சென்றதனால்
மண்ணில் நரகமாய்
உன் வாழ்வு அமைந்ததடா
இன்னல் யாவும் நீ
விதைத்த வினையால்
வந்து சேர்ந்ததடா
கெட்ட நண்பர் சகவாசம்
உனை வந்து அணைத்ததுவும்
தட்டக் கூடா நல்லோர்
உபதேசம் தலையேறாததுவும்
பட்டு மாயும் பரிதாபத்தை
உன்வசம் சேர்த்ததுவோ
புலம்பி அழது வாடுவதால்
செய்தவினை நீங்கிடுமோ
கலங்கி நின்று இறை சன்னிதானம்
தேடுடு நாடிடு ஓடிடு
துலங்கும் அமைதிக்காற்று
அங்கேனும் உனக்குக் கிட்டட்டும்

அக்குறணை, அலிறிஸாப்

Comments