எதிர்காலத்தை மாற்றியமைத்திடும் Galaxy Z Fold2 அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

எதிர்காலத்தை மாற்றியமைத்திடும் Galaxy Z Fold2 அறிமுகம்

Samsung Sri Lanka அடுத்த தலைமுறைக்கான, foldable device பிரிவைச் சேர்ந்த Samsung Galaxy Z Fold2 இனை அறிமுகப்படுத்தியது. பல மேம்படுத்தல்கள் மற்றும் அர்த்தமுள்ள புதுமைகளால் நிரம்பியுள்ள Galaxy Z Fold2 ஆனது தொழில்நுட்பத்தில் அதிநவீனத்தை அனுபவிப்பவர்களுக்கு புதிய மடிக்கக்கூடிய அனுபவத்தினையும் வழங்குகிறது.

பெரிய Cover Screen உடனும் பிரமாண்டமான பிரதான ஸ்கிறீனுடன் Galaxy Z Fold2 ஆனது திடமான வடிவமைப்பு மற்றும் நிபுணர்களின் கைவினைத்திறனை புதிய அம்சங்களுடன் ஒரு தனித்துவமான மொபைல் அனுபவத்துக்காக ஒருங்கிணைக்கிறது.
இது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பல் துறைத் திறனை வழங்குகிறது.

Samsung Sri Lanka வின் முகாமைத்துவப் பணிப்பாளரான கெவின் சங்சு யூ கருத்து தெரிவிக்கையில், “Samsung இனரான நாம் புத்தாக்கத்தின் எல்லைகளை விஸ்தரிப்பதாக நம்புகிறோம். எமது முந்தைய foldable ஸ்மாா்ட் ஃபோன்களை மிகப்பெரிய வெற்றியாக மாற்றியதன் மூலம் இலங்கை, புதிய தொழில்நுட்பத்தின் மீதான தமது அன்பைக் காட்டியுள்ளது எனப் புலப்படுகிறது. Galaxy Z Fold2 உடன் எதிர்காலத்தை நோக்கி, இன்னுமொரு நடவடிக்கையை எடுத்து வருகிறோம். நாம் எமது நுகர்வோருக்கு புதிய உள்ளுணர்வு சார் அனுபவங்களை வழங்கிடவுள்ளோம். மேம்பட்ட வன்பொருள் மற்றும் பயனர் அனுபவம், Google மற்றும் Microsoft உடனான இத்தொழிற்துறையில் முன்னணி வகிக்கும் பங்காளித்துவம் போன்றவற்றுடன் மொபைல் சாதனத்திற்கான புதிய யுகத்தை நாம் வெளிப்படுத்துகிறோம்”

Galaxy Z Fold2 ஆனது திடமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பொறியியலை ஒன்றிணைத்து தம்மகத்தே கொண்டுள்ளது. எனவே நீங்கள் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் இதைப் பயன்படுத்திட முடியும். 6.2” Infinity-O Cover Screen, அதிகபட்ச பயன்பாட்டினை வழங்குகிறது. எனவே ஒவ்வொரு முறையும் உங்கள் மொபைலினை திறக்காமல் (unfold) உங்களுக்கான மின்னஞ்சலை, திசையை மற்றும் உள்ளடக்கங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். 

Comments