5G ஸ்மார்ட்போனான Huawei Nova 7 SE இனை முன் கூட்டியே ஓர்டர் செய்யும் வாய்ப்பு | தினகரன் வாரமஞ்சரி

5G ஸ்மார்ட்போனான Huawei Nova 7 SE இனை முன் கூட்டியே ஓர்டர் செய்யும் வாய்ப்பு

உலகளாவிய புத்தாக்க ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, தனதுபுதிய ஸ்மார்ட்போனான Huawei Nova 7 SEஇனை அறிமுகப்படுத்தியதன் மூலம் அதன் புதிய வடிவமைப்பை மிகவும் பிரபல Huawei Nova  வரிசையில் சேர்த்துள்ளது. Huawei’ இன் மத்திய தர 5G ஸ்மார்ட்போன் வரிசையின் முதல் ஸ்மார்ட்போனான Nova 7 SE,  தற்போது இடம்பெற்று வரும்  Novaவின் வடிவமைப்பு சார்ந்த பரிணாம வளர்ச்சிக்கான புதிய வருகையாகும்.மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட இதன் 3D கண்ணாடி மேற்பரப்பானது அதனை கையில் வைத்திருக்கும் போது மிகவும் மென்மையான உணர்வை ஏற்படுத்துவதுடன், Novaவின் பசுமையான வண்ண வகைகளான ஸ்பேஸ் சில்வர், க்ரஷ் கிரீன் மற்றும் மிட்சம்மர் பேர்ப்பில் போன்றன அதன் வடிவமைப்பின் கவர்ச்சியை பல மடங்கு உயர்த்துகிறது.

Nova 7 SE இன் 2400x1080 பிக்சல்கள் தெளிவுத்திறனுடன் கூடிய 6.5 அங்குல LTPS Full HD  திரையானதுபாவனையாளர்களுக்கு முழுமையான காட்சி அனுபவத்தை வழங்குகின்றது.

இதேவேளை, மெல்லிய Punch Full View உடன் கூடிய திரையானது  (90% screen to body ratio)  திரைப்படங்கள் மற்றும் கேம்ஸ்களுக்கு ஏற்ற எல்லையற்ற காட்சிக்கான இடவசதியைக் கொண்டுள்ளது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் தொடர்பில் கருத்து வெளியிட்ட Huawei Devices Sri Lanka வின் இலங்கைக்கான தலைவர் பீட்டர் லியூ,”அதி துரித 5G இணைப்பினைக் கொண்ட சகாப்தத்தில் முன்னோடியாக வெளியாகும் 5G திறன் கொண்ட புதிய ஸ்மார்ட்போனே Huawei Nova 7 SE. இந்த Nova வரிசையானது என்றுமே தமது விலைப் பிரிவுக்கு மேலான பெறுமதியை வழங்கிய மத்திய தர சாதனங்கள் என்பதுடன், Nova 7 SE இவை அனைத்திலுமே  சிறந்ததாகும். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது தடையற்ற செயற்கை நுண்ணறிவு AI வாழ்க்கையை ஒவ்வொரு பாவனையாளரின் விரல் நுனிக்கே கொண்டு வருகின்றது. அதன் Quad கெமராவின் image stabilization தொழில்நுட்பமும்செயற்கை நுண்ணறிவு AI அடிப்படையிலானது,” என்றார்.

Huawei Nova 7 SE ஆனது 64MP AI Quad கெமரா அமைப்பைக் கொண்டுள்ளதுடன், இது மனித பார்வையைக் கூட கடந்து மிகக் கூர்மையான படங்களை பிடிக்கின்றது.

 

Comments