Nokia 2.4 இலங்கையில் அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

Nokia 2.4 இலங்கையில் அறிமுகம்

HMD Global இல் புதிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியான Nokia 2.4  சிறப்பான அம்சங்கள் நிறைந்ததுடன் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இதன் சிறப்புதன்மையானது AI  தொழில்நுட்பத்துடன்கூடிய Night mode மற்றும் Portrait mode செயல்பாடுடன் கூடியகேமராவும், பாவனையாளர்களுக்கு தமது வேலைகளை தடையின்றி செய்துகொள்ள தேவையான 4500mAhபாட்டரியை உடையதும் ஆகும்.

அத்துடன் 6.5” அங்குல HD Display உடன் கூடிய Nokia 2.4, Fingerprint (கைரேகை) மற்றும் face Recognition (முகத்தைஅடையாளம்காணுதல்) தொழில்நுட்பத்தினூடாக இலகுவாக தமது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை  Unlock செய்துகொள்ளவும் பாதுகாத்துக்கொள்ளவும் இடமளிக்கப்பட்டுள்ளது. மேலும் Android உடன் மூன்று வருடங்களுக்கான Security Updates மற்றும் இரண்டு வருடங்கள்வரை Android Software Updates, பெற்றுக்கொள்வதற்கு முடிவதால் பாதுகாப்பான, நவீன மற்றும் bloatware களைதவிர்த்து சிறப்பான ஒரு அனுபவத்தை அளிக்கக்கூடியது Nokia 2.4ஸ்மார்ட்கையடக்கத் தொலைபேசி.

அத்துடன் Google Assistant  ஊடாகதகவல்களை பெற்றுக்கொள்ளல் மிகவும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. பின்லாந்து உற்ப்பதியான Nokia 2.4 ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசி நீண்டகாலம் நீடிக்கும் பாணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிகார்போனேட் கவசத்துடன் டய்-காஸ்ட் உலோக அடிப்பீடம் (die-cast metal chassis with polycarbonate shell), கையடக்கத் தொலைபேசியின் நீடிப்பு மற்றும்  Nokia கையடக்கத்தொலைபேசியில் எதிர்பார்க்கப்படும் வசதியான தன்மையையும் அளிக்ககூடியது.

நோர்டிக் தோற்றத்துடன் Dusk, Fjord மற்றும் Charcoal ஆகியவர்ணங்களில் 2/32 மற்றும் 3/64 RAM / ROM வசதிகளுடன் மிகவும் நியாயமான விலையில்ரூ. 23,850 இற்கு Nokia 2.4 பெற்றுக்கொள்ளமுடியும். Nokia 2.4 புதிய Android 11 OSஇற்கு  upgrade செய்யதுகொள்ளகூடியது.

 

Comments