SLT ஆன்லைன் பில்கொடுப்பனவுகள் இப்போது நிகழ்நேரத்தில் | தினகரன் வாரமஞ்சரி

SLT ஆன்லைன் பில்கொடுப்பனவுகள் இப்போது நிகழ்நேரத்தில்

அன்புடன் அரவணைக்கும் செலான்வங்கி, வாடிக்கையாளர்களின் வசதியை மேலும் மேம்படுத்தும்வகையில், SLT ஆன்லைன்பில்கொடுப்பனவு வசதியை சமீபத்தில் மேம்படுத்தியது. மொபைல் மற்றும் இணையவங்கி, கியோஸ்க்கள் மற்றும் கிளைவலையமைப்பை உள்ளடக்கிய எந்த செலான் வங்கி கட்டணதளங்களிலிருந்தும்  SLT தரைவழி தொலைபேசி, Peo டிவி மற்றும் பிராட்பேண்ட் சேவைகளுக்காக ஆன்லைனில் SLT பில்செலுத்தும் வாடிக்கையாளர்கள், இப்போது உடனடியாக தங்கள் SLT கணக்கில் மாற்றத்தை கண்டுகொள்ளலாம். அனைத்து செலான் வாடிக்கையாளர்களுக்கும் பெற்றுக்கொள்ளக்கூடிய இந்த புதியசேவை தொந்தரவற்றதும் வசதியானதுமாகும்.

மேலும், இது, வாடிக்கையாளர்கள் எந்தவொரு அவசரகொடுப்பனவுகளையும் தீர்க்க SLT அலுவலகத்திற்கு செல்லும்தேவையை இல்லாதொழிக்கிறது. வாடிக்கையாளர் வசதிகளை அவர்களின் செயல்பாடுகளின் மையத்தில் வைத்து, உன்னத மதிப்பு மற்றும் வங்கிஅனுபவத்தை வழங்கும் நிதிதயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை செலான் வங்கி தொடர்கிறது.

செலான்வங்கி, அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு உயர்தர வங்கி அனுபவத்தை வழங்குவதற்காக புதியதொழில்நுட்பம், புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் புரட்ச்சிகரமாக முன்னோக்கி செல்கிறது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சில்லறை, மற்றும் நிறுவன வாடிக்கையாளர்கள் என்று வளர்ந்துவரும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளசெலான்வங்கி நாடுமுழுவதும் 173 கிளைகள், 70 பணம்வைப்பு இயந்திரங்கள், 66 காசோலைவைப்புஇயந்திரங்கள்மற்றும்216க்கும் மேற்பட்ட ATM வலையமைப்புடன் தனது தடத்தை விரிவுபடுத்தியுள்ளது.

Comments