ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்‌ஷவின் தேர்தல் வெற்றி; தேசியத்தை உருவாக்க கிடைத்த பொன்னான இறுதி சந்தர்ப்பம் | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்‌ஷவின் தேர்தல் வெற்றி; தேசியத்தை உருவாக்க கிடைத்த பொன்னான இறுதி சந்தர்ப்பம்

ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்‌ஷவின்  தேர்தல் வெற்றி, இந்நாட்டை அந்நியரின் ஆதிக்கத்திலிருந்து மீட்ட   துட்டகைமுனுவின் வெற்றியுடன்  ஒப்பிட்டு  நாம் புரிந்து கொள்ள வேண்டும். அன்னியரின் ஆதிக்கத்திலிருந்து நாட்டை மீட்ட தாதுசேனன், சோழர்களிடம் இருந்து நாட்டை பாதுகாத்த விஜயபாகு, ஆறாவது பராக்கிரமபாகு  ஆகியோரின் நடவடிக்கைகளுடன் ஒப்பிடக் கூடியது. வெற்றியாகும். நாம் கோட்டாபய ராஜபக்‌ஷவின்  இந்த வெற்றிப் பயணப்  பாதையை பற்றிய சரியான விளக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும்.நாம் இவ்விடயத்தை  சிறிய விடயமாக கருதாது எமது நீண்ட கால  சரித்திரத்தின் உடன் இணைத்து அதன் தொடர்ச்சியாகவே புரிந்து கொள்ள வேண்டும்  என்பதே எனது கருத்தாகும்.

இதுவரை இந்த வெற்றியை பற்றி சரியான விளக்கம்  வழங்கப்படவில்லை  என்பதே எனது கருத்து. அனேகமானோர் மோசடி நிறைந்த நல்லாட்சி  அரசாங்கத்துக்கு  எதிராகவும் மற்றும் வேறு பல காரணங்களுக்காகவுமே மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்தார்கள் என்று கூறுகின்றனர். அதுவும் காரணமல்ல என்று கூற முடியாது.  இது தேசிய சக்திகளின் எதிர்பார்ப்பும்  உத்வேகமுமாகும். அது கடந்த காலங்களில் மெல்லமெல்ல உருவாக்கி பெற்றுக் கொண்ட வெற்றியாகும். 

ரணில் விக்ரமசிங்க   ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள்  மனதில் பயம் உண்டாகியது.  இந்நாட்டின் அழிவு நெருங்கிவிட்டது என எண்ணினார்கள். உறுதியாக  நாட்டை  காப்பாற்றுவது கோட்டாபய ராஜபக்‌ஷ என மக்கள் நம்பினார்கள். இவ்விடயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

கோட்டாபய ராஜபக்‌ஷவின் வரவானது எமது நாட்டை, இனத்தை மேம்படுத்த கிடைத்த பொன்னான சந்தர்ப்பமாகும்.  தேசியத்தின்  மீது உருவான  உத்வேகம் மற்றும் சுபிட்சத்தால் பெற்ற இந்த வெற்றியை பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

தேசியம் என்று  நான் கருதுவது, ஒரு இனத்தால் ஏற்படுத்தப்படும் சுபிட்சம் ஆகும்.சுபிட்சத்தின் உணர்வு தேசியத்தின் முக்கிய காரணியாகும்.
நாம் தெளிவாக ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்,  எமக்கு  எவ்வளவுதான் அந்நிய கொள்கைகள் மீது பிடிப்புள்ள நிர்வாகிகள்,  அதனை தூண்டுபவர்கள் இருந்தாலும்  எமது மனங்களில்  இன்றும் எமது இனத்தைப் பற்றிய உணர்வே மேலோங்கி உள்ளது. எமது இனம் ஆபத்துக்குள்ளாகும் எல்லா வேலைகளிலும் ஏதோ ஒரு சக்தி செயல்பட்டு அதிலிருந்து நாம் மீள்வதை நான் கண்கூடாக கண்டுள்ளேன்.

எனது ஞாபகத்தில் உள்ளபடி  சரித்திரத்தில் அவ்வாறான ஒரு சந்தர்ப்பம்  உள்ளது. ஆங்கிலேயர் இந்த நாட்டை  அழிக்க முற்பட்ட வேளையில்  முன்வந்த அநகாரிக்க  தர்மபால  அவ்வாறான ஒருவராவார்.அவர் தேசிய உணர்வை ஏற்படுத்தும் அடித் தளத்தை உருவாக்கினார். சுபிட்சத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கொள்கை ஒன்றை உருவாக்கும்  அடிப்படை  அவரின் வழிகாட்டல்  மூலமாகவே நடந்தது.

பண்டாரநாயக்க   1952 ல்  ஐக்கிய தேசியக் கட்சியை  விட்டு  விலகிய நிலையில் அவருடன் மிகச் சிலரே  இருந்தார்கள்.  அதில் முன்னிலை வகித்தவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தந்தையான  டி . ஏ.    ராஜபக்‌ஷ ஆவார். அந்த தைரியமான  இரத்த  உணர்வு  ராஜபக்‌ஷக்களிடம் காணப்படுவது  மரபணு  ரீதியானது என கூறலாம்

அடுத்து சந்தர்ப்பமாக 56 புரட்சியை கூறலாம். ஐக்கிய தேசியக் கட்சியின் அந்நிய  மோகத்துக்கு  எதிரான 56 ல்  செய்த புரட்சி  இது போன்ற ஒன்றாகும்.சிறிமாவோ அம்மையாரும் அவர் வழியில் பயணித்து  அன்னிய மோகத்துக்கு எதிராக செயல்பட்டார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து  மீட்க மக்கள் பெரும் பலத்தை வழங்கினார்கள்.நான் முன்னர் கூறியது போல் எமது இனம் ஆபத்தில் உள்ள போது   கடவுள்  போன்ற ஒருவர்  எம்மை மீட்க முன்வருவது நாம் செய்த பூர்வ புண்ணியமாகும்.
கடந்த சில தசாப்தங்களாக  இனத்தை நேசிக்கும் மக்களால் மேற்கொள்ளப்பட்ட பெரும் போராட்டத்தின்  பலன் என்று  இதனைக் கூறலாம். அந்நிய சக்திகளால் மக்களின் மனதிலிருந்து தேசியத்தை அகற்ற நினைத்தாலும் அது இலகுவானது அல்ல என இவ்விடயங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

கடந்த ஒரு வருட காலமாக இதனை புரிந்து கொண்டு ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்‌ஷசெயல்பட்டுள்ளார் என  தெளிவாகத் தெரிகின்றது.   அவர் தேசிய சக்திகளுக்கு   செவி சாய்ப்பவர்.  20 ஆவது திருத்தத்தின் போது அவரின்  நெகிழ்வான போக்கு அதற்கு சரியான உதாரணம் ஆகும்.  நாம் தெரிவித்த கருத்துகளுக்கு  அவர்  செவி சாய்த்தார். ஜனாதிபதி  ஒருபோதும் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதில்லை என தெளிவாகக் கூறியுள்ளார்.அது எமக்கு முக்கிய விடயமாகும். அவரின் சுதந்திர மற்றும் நடுநிலைமைக்கு  நாம் மிகவும் மதிப்பளிக்க வேண்டும்.

அடுத்து தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த  தேசிய கைத் தொழிலாளர்களை ஊக்குவிக்க அவர் நீண்ட காலத் திட்டங்களை தீட்டி அதன்படி   செயல்படுகின்றார். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிலாளர்களுக்கு  பல சலுகைகளை வழங்குவதுடன், வட்டி வீதத்தைக் குறைத்தது  நீண்டகால  முதலீடுகளை  பெறவும் அது வழிவகுக்கும். அவர் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்கும் முயற்சியை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

விவசாய பொருளாதாரத்தை  மேம்படுத்த  மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பெறுமதி வாய்ந்தவையாகும்.சிறிமாவே பண்டாரநாயக்க அம்மையாரின் அன்றைய தேசிய பொருளாதாரத்தை  மேம்படுத்தும்நடவடிக்கையை நாம் ஆரம்பமாக கொள்ளலாம். அதனை அடிப்படையாகக் கொண்டு முன்னோக்கி செல்வதையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும்  விரும்புகின்றார்.

நல்லாட்சி அரசாங்கம்  அந்நிய நாட்டு சக்திகளின்  சூழ்ச்சியின் .பயனாகவே உருவானது.   அதனை முற்றாக மாற்ற வேண்டிய தேவை தற்போதைய அரசாங்கத்தின் முன்னுள்ள சவாலாகும்.

13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட வேலையில் இந்தியா தனது ஏகாதிபத்தியத்தை எமது நாட்டில் திணிக்க முயற்சி செய்தது.

அவ்வேளையில் எமக்கு சர்வதேச ரீதியாக  நண்பர்கள் இருக்கவில்லை.  அப்போது  ஜே.ஆர் ஜெயவர்தன 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட வேளையில் எமக்கு நண்பர்கள் இல்லை என்று கூறினார்.ஜே . ஆர் அன்று  அமெரிக்கா உதவி செய்யும் என்று எண்ணினார் .  அவர் சூழ்ச்சியின்  ஒரு பங்குதாரர் அமெரிக்கா என அறிந்திருக்கவில்லை.

அன்று எமக்கு நட்பு நாடொன்று இருக்கவில்லை. ஆனால் இன்று   பலம் வாய்ந்த நட்பு  நாடாக சீனா உள்ளது.

இங்கு முக்கியமாக  உள்ள விடயம் என்னவென்றால் சீனாவுக்கு  எம்மை அடிமைப்படுத்தும் அவசியமில்லை.எமது இறையாண்மைக்கு தீங்குசெய்யாமையை  நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு உள்ளது.

வர்த்தக நடவடிக்கைகள் மூலம்  நாட்டைவளர்ச்சி அடையச் செய்ய அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவது மிக அவசியமாகும்.எம்மை அடிமைப்படுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்றே நான் கருதுகின்றேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவார்த்தையினால் மாத்திரமல்ல   செயலாலும்  நாம் நடுநிலையாளர்கள் என நிரூபித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் பொம்பியோ’நீங்கள் சீனாவின்  கடன் பொறியில்   சிக்கியுள்ளீர்கள்’ என கூறியபோது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷதனது பதிலில்   ‘நாம் கடன் பொறியில் சிக்க வில்லை.நாம் சீனாவுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வருகின்றோம்’ என பதிலளித்தார். அவ்வாறான நடுநிலைக்  கொள்கையை கொண்டிருப்பது நாட்டின் தலைவருக்கு மிக அவசியமாகும் .நாம்  சிறிய நாடு என்பதை  கவனத்திற் கொள்ள  வேண்டும்

எமது இறையாண்மையை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பது அவசியமாகும். நாம் முரட்டுத்தனமாக இல்லாது  மிகவும் சூட்சுமமாக ஏனைய நாடுகளுடன்  நட்பை  ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.   அதேவேளை அவற்றின் அழுத்தத்தில் இருந்தும்  பாதுகாப்பாக இருக்க வேண்டும். சர்வதேச உறவுகளை நாட்டுக்கு நன்மை அளிக்கும் வகையில் பேண வேண்டும். அது இலகுவான விடயமல்ல. நாம் உணர்வு ரீதியாக பல காரணங்களால்  சில  விடயங்களை தெரிவித்தாலும் தனித்த ஒரு நாடாக நடவடிக்கையில் ஈடுபடுவது இலகுவான காரியமல்ல.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உதாரண புருஷராக செயற்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு குடும்பத்தாரிடம் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமான விடயமாகும். மூன்று சகோதரர்களிடம் இருந்தும் கிடைக்கும் ஒத்துழைப்பு அவருக்கு பெரும்  பலம் என நான் எண்ணுகின்றேன். இந்தியாவில் நேரு குடும்பமும் அது போன்ற ஒன்றாகும்.

சுயநலத்துக்காக அல்லாது பொது நலத்திற்காக அதனை பயன்படுத்தும் போது அது பெரும் சக்தியாகத் திகழ்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷயுத்தத்தில் வெற்றி பெற அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின்  நடவடிக்கைகள் பெரும் உதவியாக இருந்தன .

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சுற்றி கற்ற அறிஞர்கள் சமூகம் இணைந்திருப்பது இன்னுமொரு மிக முக்கிய விடயமாகும் .
அவர்கள் தமது கடமையாக எண்ணி  வெற்றியை பெற்றுக்கொள்வதற்காக.  பின்னணியில் இருந்து செயல்பட்டார்கள் . நாட்டில் அறிவியலாளர்கள் சமூகம் மிகவும் முக்கியமான தீர்மானங்களில்  அரசுக்கு ஆதரவாக இருப்பது நாட்டின் முதலீட்டு நடவடிக்கைகளுக்கு பலமாக அமையும்.

உலகமயமாக்கல் என்னும்   நிலைமையை கருத்தில் கொள்ளும் போது  வலுவாக இருக்க வேண்டுமென்றால்  தேசியத் துவத்தை உபாயமாக கொள்வதைத் தவிர வேறு வலுவான விடயம் இல்லை என்பது எனது கருத்தாகும். உலகமயமாக்கல் என்பது  முதலாளித்துவத்தின் இறுதி சந்தர்ப்பமாகும்.

மேற்குலகம் கூட தற்போது உலக மயமாக்கல் என்னும் கருத்து குறித்துவிரக்தி  நிலையிலேயே உள்ளனர்.

அதனால் உலகமயமாக்கலுக்கு மாற்று வழி இல்லை.  இருக்கும் ஒரே மாற்று வழி தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட  சுபிட்சமான நாடு என்ற கொள்கையாகும். இது குறித்து எனக்கு பாரிய நம்பிக்கையுண்டு.சீனாவை பற்றி அண்மையில் ஒருவர் கூறிய விடயத்தை நான் வாசித்தேன். சீனா உலகமயமாக்கலை நிராகரித்து முதலாளித்துவத்தை நோக்கி  செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நான் அறிந்தவரையில் அது தவறான விளக்கமாகும்.

இந்நிலைமை  உண்மையில் முதலாளித்துவம் அல்லாத    மாக்ஸ்  வாதம்  அல்லாத நிலைமையாகும் . சீனா என்பது முற்றுமுழுதாக  சுபிட்சத்தின் பெயரில் உருவான இராட்சியமாகும். சீனா பற்றிய விடயங்கள் அடங்கிய புத்தகம் ஒன்று உள்ளது.when china rules the world என்னும் ஜக் மார்ட்டின்  ஜக்  எழுதியது. அதில் அவர்  சீனா முற்றிலும் சுபிட்சத்தை அடிப்படையாகக் கொண்ட நாடென்ன குறிப்பிட்டுள்ளார்.

எமக்கு சோசலிசம் தேவை என்றால் எமது நாகரிக இராஜ்ஜியம்  ஒன்றை உருவாக்க வேண்டும். ஏனென்றால்  புத்த தர்மத்துக்கு அமைய உருவான  இராஜ்ஜியம் ஒன்று எமக்கும் உள்ளது. அதனால் சோசலிசத்தை வெளியிலிருந்து கொண்டு வரவேண்டிய அவசியமில்லை.
ஆசிய நாடுகளில்   நாகரிகங்களை கொண்ட  இராஜ்ஜியமே உள்ளன. அன்னியருக்கு  அடிமை ஆவதற்கு முன்னர் இலங்கை, பர்மா, கம்போடியா, தாய்வான்  இந்த அனைத்து நாடுகளுக்கும்  ஒரு நாகரிகம் தான் காணப்பட்டது

இதேபோன்று மூன்று நாடுகள் தெற்காசியாவில் இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.  அவை பர்மா, தாய்வான் மற்றும் இலங்கை என எழுதியிருந்தார். இந் நாடுகள் அனைத்திற்கும் அந்தப் பலம் இருந்ததெனவும் குறிப்பிட்டிருந்தார்.

எஸ். டபிள்யூ.ஆர் .டி . பண்டாரநாயக்கவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அதற்கான    வழி இருந்தாலும் அவர் அதனை நிறைவேற்ற முடியாது போனது எனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால்  இலங்கைக்கு அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் பொன்னான வாய்ப்பு    இதுவாகும்.

கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்குப் பின்னால் இந்த செயலே உள்ளது. அவர் அதனை நிறைவேற்றுவார் என்பதற்கு நிறைய சாட்சிகள் உள்ளன.

சுமுது  சத்துராணி ஜெயவர்தன
தமிழில்: வயலட்

Comments