அன்புத்தாயே! | தினகரன் வாரமஞ்சரி

அன்புத்தாயே!

நெஞ்சமெல்லாம்
நீதான் தாயே
நிழலானாய்
என்மனதில் நீயே
என்கண்களுக்குள்
செரிகின்றது
நோயுடன்
நீ படுத்த பாயே
உன்னைவிட்டு
என்னை
தூரமாக்கியது
என்வீட்டாள் செயலே
உன்னுடன்
முரண்பட்டதும்
அவள் வாயே
என் நினைப்பு
அவளொரு பேயே
நான்!
அறிந்திருக்கவில்லை
அவள் நகர்த்திய காயே
உன் இறப்பிலும்
நான் கலந்துகொள்ளவில்லை
என் இறப்புவரை தொடரும்
அந்தக் கவலையே
அதனால்தான்
நான் எழுதும்
இந்த உரையே
என்னை மன்னித்துவிடு
என் அன்புத்தாயே!

கலாபூஷணம் நிந்தவூர்
மக்கீன் ஹாஜி

Comments