உன்னத நாளே! | தினகரன் வாரமஞ்சரி

உன்னத நாளே!

ஊரெல்லாம் இன்பத் தீபநாள் வந்ததென்று
உள்ள மெல்லாம் மகிழ்ச்சி ஒளி எழுப்பிநிற்க
நல்லோர் போற்றும் நல்லநாளை போற்றி
நாமும் கொண்டாடி மகிழ்வோமம்மா
ஆடிவருகின்றாள் தீப நாளன்று
பாடி மகிழ்ந்திடுவாள் ஒரு மனத்துடன்
நாடி வந்தாளாம் நல்லோர் போற்றிட
கூடி கொண்டாடுவொம் தீபநாளன்று
போர் ஓய்ந்து பொல்லாப்புகள் அழிந்து
கார்முகில் வண்ணன் கண்ணனைத் துதித்து
பார் போற்றும் வெற்றிநாளது
பொங்கும் மங்களமாக தீபாவளி வந்ததுவே
சொந்தங்கள் சேர்ந்து இணைந்து மகிழ்ந்திட
பந்தங்கள் பாங்கோடு பட்டாசு கொளுத்திட
கந்தன் கருணையை வேண்டி நின்றிட
எந்தக் குறையும் போக்கிடும் நன்னாளில்
யுத்தம் ஒழிந்திட உறவுகள் சேர்ந்திட
நித்தம் பயமும் இன்றே ஒழிந்திட
கத்தும் கடல்போல் கருணை பொழிந்திட
நித்தம் சமாதானம் நீடித்து நிலைத்திட
கூடி மகிழும் உன்னத தீபத்நாளாம்

உடப்பூர் வீரசொக்கன்

Comments