நடிகையாகும் சானியா மிர்சா | தினகரன் வாரமஞ்சரி

நடிகையாகும் சானியா மிர்சா

எம்டிவி நிஷேத் என்ற வெப் தொடர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. பாலியல், கருக்கலைப்பு மற்றும் நோய்கள் சம்பந்தமான விஷயங்களை இதில் சொல்லி இருந்தனர். தற்போது இந்த தொடரின் அடுத்த பாகம் தயாராக உள்ளது. இதற்கு ‘எம்டிவி நிஷேத் அலோன் டுகதர்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

காசநோய் பாதிப்பை மையமாக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொடராக உருவாகிறது.

இதில் நடிப்பது குறித்து சானியா மிர்சா கூறும்போது, “காசநோய் நமது நாட்டில் தீராத வியாதியாக உள்ளது. இந்த நோயில் சிக்கியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதுக்கும் குறைவானவர்களாக உள்ளனர். கொரோனா காலத்தில் நோய் பாதிப்பு இன்னும் அதிகமாக உள்ளது. இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை எம்டிவி நிஷேத் அலோன் டுகதர் தொடர் அழுத்தமாக பதிவு செய்யும். நான் இந்த தொடரில் பங்கேற்பது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்றார்.

Comments