கனவு பலிக்கட்டும் | தினகரன் வாரமஞ்சரி

கனவு பலிக்கட்டும்

வறுமை அறவே ஒழியட்டும்  
வளங்கள் எங்கும் நிறையட்டும்  
ஒருமைப் பாட்டின் மேம்பாட்டை  
உலகம் முழுக்க உணரட்டும்!  
உடலின் உழைப்பும் அறிவுழைப்பும்  
ஒன்றுக்கொன்று துணையாகி  
கடமை என்றே உயர் குலத்தை  
காக்குந் திறனை வளர்க்கட்டும்!  
அறிவுக்கென்றே செலவாகும்  
அத்தனை பொருளும் சேமித்து  
ஆக்கப் பணிக்கே பயனாக்க  
அறிஞர் கூட்டம் முனையட்டும்!  
உலகுக்கெல்லாம் பண்பாட்டை  
உணர்த்தும் நிலையை நம் நாடு  
என்றும் பெற்றுத் திகழ்ந்திருக்க  
ஏற்ற முறைகள் காணட்டும்! 

கல்லொளுவை பாரிஸ்
 

Comments