​பெற்றெடுத்த தெய்வம்! | தினகரன் வாரமஞ்சரி

​பெற்றெடுத்த தெய்வம்!

என்னை
சுமந்து பெற்றவள்!
தன்னலம் கருதாமல்
பாலூட்டிச் சீராட்டி
அமுதூட்டியவள்!
ஊண் உறக்கம் மறந்து
என் உடல் நலம் காத்தவள்
படிப்பறிவு தந்து
பக்குவமாய் வளர்த்து
இன்னல்களுக்கு மத்தியில்
எனைக் காத்துக் கரைசேர்த்த
என் தாயே
எனக்கு என்றும்
தெய்வம்!

வான்மதி

Comments