புதிய சாதனைகளுக்கு வழிகோலும் தனித்துவமான டிஜிட்டல் அணுகுமுறை LoweDigital அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

புதிய சாதனைகளுக்கு வழிகோலும் தனித்துவமான டிஜிட்டல் அணுகுமுறை LoweDigital அறிமுகம்

MullenLowe Group, Sri Lanka (MLG) விளம்பர முகவர் நிறுவன குழுமத்தின் ஒரு அங்கமாகத் திகழும் LoweDigital, தற்போதைய தொற்றுநோய் நிலைமையின் கொந்தளிப்பான வணிக நிலைமைக்கு மத்தியில் ஒரு வருட செயற்பாடுகளைப் பூர்த்தி செய்துள்ளது. ஒக்டோபர் 2019 இல் செயற்படத் தொடங்கிய நிறுவனம், வர்த்தகநாமங்களுக்கான ஒரு நோக்கத்தைக் கண்டறிய முயற்சிக்கும் ஊடகமாக இருப்பதை விடுத்து, ஊடகத்திற்கு நோக்கத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு நிகழ்ச்சி நிரலை ஏற்படுத்தியிருந்தது.

வர்த்தகநாமங்கள் சார்ந்த இடைத்தொடர்பாடல் (engagement), பகிர்வுகளின் எண்ணிக்கை (share), விருப்பங்கள் மற்றும் அடைவு மட்டம் (likes & reach) இவை அனைத்தும் இன்றைய டிஜிட்டல் இடப்பரப்பில் பெரும்பாலும் ஊடகம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை கூர்ந்து கருத்தில் கொள்ளாது ஒரு வலுவான வர்த்தகநாம சிந்தனைப் பின்னணியின்றி பணத்தைச் செலவழித்து முன்னெடுக்கப்படக்கூடியவை.

துரதிர்ஷ்டவசமாக, இலங்கையில் டிஜிட்டல் ஊடகம் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை போன்ற பிரதான விளம்பர மார்க்கத்திற்கான செலவுக்குப் பதிலாக ஒரு மாற்றுத் தெரிவாக சந்தையில் எடுக்கப்பட்ட ஆரம்ப நிலைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தகநாமங்கள் இந்த ஊடகத்தை அதன் உண்மையான திறனை வெளிக்கொணரும் வகையில் முழுமையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டதாக LoweDigital இன் தலைமை அதிகாரி கெவின் குலத்திலக குறிப்பிட்டார்.

LoweDigital தொகைகளையும், இலக்கங்களையும் கருத்தில் கொள்வதை விடுத்து, மூலோபாயமிக்க வர்த்தகநாம சிந்தனை வெளிப்பாட்டை முன்னிலைப்படுத்த முடிவு செய்தது. அர்த்தமுள்ள வழியில் டிஜிட்டலைப் பயன்படுத்தி இந்த ஊடகம் வழியாக சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் எவ்வாறு பயணிக்கின்றன என்பதை ஆழமாக புரிந்து கொண்டால் தொகைகளும், இலக்கங்களும் தானாகவே வந்து சேரும் என அவர் குறிப்பிட்டார். 

Comments