ரியசக்வல ஊடாக DPMC சான்றிதழ் அளிக்கப்பட்ட முச்சக்கர வண்டிகள் | தினகரன் வாரமஞ்சரி

ரியசக்வல ஊடாக DPMC சான்றிதழ் அளிக்கப்பட்ட முச்சக்கர வண்டிகள்

40 வருடங்களுக்கு மேலாக பஜாஜ் வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்து விநியோகிக்கும் ஏக முகவரான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடட் இந்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தி தன்னுடன் இணைந்த ரியசக்வல ஊடாக DPMC சான்றிதழ் அளிக்கப்பட்ட முச்சக்கர வண்டிகள்” (DPMC Certified Three-wheelers) வழங்கும் திட்டம் ஒன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியது.

ரியசக்வல அறிமுகப்படுத்தியுள்ள DPMC சான்றிதழ் அளிக்கப்பட்ட முச்சக்கரவண்டி” ஊடாக கையில் காணப்படும் முதலுக்கு உரிய பெறுமதியை வழங்கி நம்பிக்கையான வாகனம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரியசக்வல தொடர்பில் தான் மிகவும் திருப்தி அடைவதாக அண்மையில் ரியசக்வல ஊடாக முச்சக்கரவண்டி ஒன்றைக் கொள்வனவு செய்த கிரேஸன் உபாலி மதுரசிங்ஹ கருத்துத் தெரிவித்தார்.

பொரளையில் வசிக்கும் உபாலி காசல் வைத்தியசாலையில் பணியாற்றுவதுடன் தனது குடும்பத்தாரின் பயன்பாட்டிற்கும், மேலதிக வருமானத்தை உழைக்கும் நோக்கிலும் இந்த முச்சக்கர வண்டியை கொள்வனவு செய்ததாக தெரிவித்தார்.

உபாலி மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ரியசக்வல ஊடாக முச்சக்கர வண்டியைக் கொள்வனவு செய்யும் போது அதற்கு தேவையான நிதி உதவியையும் அவ்விடத்திலேயே பெற்றுக் கொள்ள முடிந்ததாகவும், அசட்லைன் லீசிங் நிறுவனத்தின் ஊடாக இந்நிதியுதவி கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.

முதலாவது தவணைப் பணத்தை செலுத்த நான் அடுத்த வாரம் அசட்லைனுக்கு  செல்வேன்” என அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

ரியசக்வலவில் முச்சக்கர வண்டியை கொள்வனவு செய்த மற்றுமொரு வாடிக்கையாளரான. இம்ரான் நிசாம் இஸ்மாயில் கருத்து தெரிவிக்கையில், தான் ஜயவர்த்தன கமவில் வசிக்கின்ற போதும் பத்தர முல்லையில் உள்ள ரியசக்வால தொடர்பில் அறிந்து இருந்ததாகக் கூறினார்.

“நான் தனியார்துறை நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றேன். தற்பொழுது நிலவும் பொருளாதார நிலைமையில் மேலதிக வருமானம் ஒன்றைத் தேடிக்கொள்வதற்காகவே நான் இந்த முச்சக்கர வண்டியை கொள்வனவு செய்தேன்” என இம்ரான் குறிப்பிட்டார்.

Comments