2020கள் இந்தியாவுக்கு சொந்தமானவை | தினகரன் வாரமஞ்சரி

2020கள் இந்தியாவுக்கு சொந்தமானவை

டாட்டா குழுமத்தின் தலைவர்

கொவிட்டின் தாக்கமானது முழுமையாக ஊடுருவிப் பரவும் தன்மையைக் கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் பணிமுறைகள் எதிர்காலத்தில் வேலைகள் எப்படி அமையப் போகின்றன என்பதைப் பற்றி நிறுவனங்களை மீண்டும் சிந்திக்க வைத்துள்ளதாக டாட்டா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் கூறியிருக்கிறார்.

Ficci இன் 93ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் “எழுச்சியூட்டும் இந்தியா: ஒரு வர்த்தகத் தலைவரின் கண்ணோட்டம்” என்ற அமர்வில் உரையாற்றியபோது” தொழில்நுட்பத்தின் மீதான எமது நாட்டம், கொவிட் நோய்த் தொற்றையும் இந்தியா மீதான அதன் தாக்கத்தையும் மிகவும் சாதகமான ஒரு மன நிலையில் பார்க்கச்செய்துள்ளது. 2020கள் இந்தியாவுக்கே சொந்தமானது.

இதனை மேலும் விளக்கிச் சொல்வதானால் டிஜிட்டல் தரவுகளின் மேம்பாடு மற்றும் அமெரிக்கா மீதான சீனாவின் பிணைப்பறுத்தல் போன்ற சுய ஐயமற்ற போக்கு இந்த நம்பிக்கையை பலப்படுத்துவதாக உள்ளது.” என்று சந்திரசேகரன் மேலும் கூறினார்.

“மேற்கூறிய அனைத்து போக்குகளிலும் இந்தியாவுக்கு மிகச்சிறந்த எல்லையற்ற வாய்ப்புகளை நான் காண்கிறேன். எமது மொத்த உள்ளுர் உற்பத்தி துறையை வளர்த்தெடுப்பதில் நாம் அடிக்கடி சிரமங்களை எதிர்நோக்கி வருவதை காண முடிகிறது. நாம் எப்போதும் சக்தி, தளபாடங்கள் மற்றும் தொழிலாளர் தொடர்பான விடயங்களையே கோடிட்டுக் காட்டுகிறோம்.

அதிக வட்டி விகிதங்களையும் அளவு மிகுந்த ஊக்குவிப்பை முறைப்படுத்துவதையும் இடையீடுகளையும் நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.

எவ்வாறெனினும் எதிர்காலத்தில் இதனை பின்தள்ளி விட்டு கைத்தொழில்களை ஆரம்பிக்கும் நோக்கில் தொலைநோக்குப் பார்வையுடன் செயற்பட ஆரம்பித்தால் புதிய உலக வரிசையில் நாம் திருகாணியாக மாற முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.

”திறமை மீது அக்கறை காட்டவேண்டும். அதே நேரம் தரவுகள் மற்றும் இணைய தொழில்நுட்பம் ஆகியவை புதிய முறைப்படுத்தல் அளவுகோலாக மாறவேண்டும். கைத்தொழிலுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே ஒரு கூட்டுப் பங்களிப்பை நான் காண்கிறேன்” என்று சந்திரசேகரன் மேலும் கூறினார்.

”கைத்தொழில்துறை தைரியமாக இருப்பதுடன் அனைத்து திட்டங்களையும் கூர்நோக்குடன் கணிக்கவேண்டும். இந்த பங்களிப்பினை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் உதவ வேண்டும்.

இதன் மூலம் இந்த புதிய உலகத்துக்கான தனது பங்கை ஆற்றுவதற்கு இந்தியா தயாராக முடியும். இந்தியாவின் முதலாவது சாரப்பலகை டிஜிட்டலாக இருக்குமாயின் இரண்டாவது சாரப்பலகை உலகளாவிய கொத்துச் சரங்களை அணுகுவதாக இருக்க வேண்டும்”  என்று சந்திரசேகரன் கூறுகிறார்.

“இந்தியாவின் மூன்றாவது சாரப்பலகை சூழல் விரிதிறன் ஆகும். இதற்கு மேலதிகமாக நகர்கைக்கான சக்தி மற்றும் செயற்திறன், சூரிய சக்தி பயன்பாடு, எமது உணவுச் சங்கிலி விநியோகம் ஆகிய விடயங்கள் தொடர்பாக நாம் கொவிட் நோய்த் தடுப்பில் இருந்து விடுபடும் நிலையில் அக்கறை செலுத்த வேண்டிய அம்சங்கள் ஆகும்” என்று சந்திரசேகரன் வலியுறுத்துகிறார்.

Comments