ஏன்? | தினகரன் வாரமஞ்சரி

ஏன்?

சோதனைத் தீ 
சுடும் போதும் 
வேதனைத் தணலில் 
வெம்பும் போதும் 
நான் –  
கூறுகிறேன் 
வாழ்வு பொய்யென்று 
சோகம் 
கலவை செய்யப்பட்ட 
நிதம் –  
கன்னம் நனையும் 
நிம்மதியற்ற வாழ்வு 
கோபம் – 
இஃது எனக்கு 
அவசியமானது 
சமூகத்தின் 
வார்த்தைக் கீறல்களால் 
இரத்தத்தி னூடே 
உள்ளத்தில் ஊறிய 
கொதிக்கும் ஊற்று 
நான் – மெளனியாக இருப்பதாலும் 
தனிமை தேடியதாலும் 
என்னை – 
சொல் அம்புகளால் 
வருத்துகிறது மனிதம் 
அப்போதும் – 
மௌனமே 
எனது மொழி 
இந்த- 
மானுடத்தின் 
கண்களிலிருந்து 
நீண்ட தூரம் 
சென்று வாழ வேண்டும் 
இது – என் 
நாளாந்தத் துடிப்பு 
ஏன்?  
என்ற கேள்வியிலேயே 
எனது சோகம் 
எழுந்திருக்கிறது 
எனக்குப் புரியவில்லை 
மனிதம் வெறுப்பது 
சமுதாயம் 
என்னை மதியாவிட்டது 
இல்வாழ்க்கை 
எனக்கு 
அஸ்தமனம்

திக்குவலை ரிஸ்மியா மஸூத்  

Comments