
தேன் சிந்தும் செந்தமிழே வாழி!
தெவிட்டாத இனிப்பு சுவைக்க
தேன்மொழி தமிழே நீ நீடூழி வாழி
தேமதூர ஓசை ஒலிக்கும் மொழியே!
கம்பளை சீறா உமரை – மகா பாரதியை
கண்டு களித்த தமிழே! சுவைத்து முடிக்க முடியாது
எம்முள்ளம் மகிழ்ந்திட வந்திடு
என்றும் இனிதாய் உறவாட உதவிடும்
அறிவியல் மொழியாய் அவனியில் திகழ்கிறாய்
அறிஞராய் அகிலத்தில் ஜொலித்திடச் செய்கிறாய்
பொறியியல் கல்வியும் தெளிவுற வழங்கினால்
பொன்னான யுகத்தை உருவாக்கினாய்
கலாபூஷணம் எம். வை. எம். மீஆத்