பஜாஜ் அசல் உதிரிப்பாகங்களை வீட்டு வாசலுக்கே விநியோகிக்கும் DPMC | தினகரன் வாரமஞ்சரி

பஜாஜ் அசல் உதிரிப்பாகங்களை வீட்டு வாசலுக்கே விநியோகிக்கும் DPMC

கொவிட்-19 தொற்று சூழ்நிலையில் பஜாஜ் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பஜாஜ் அசல் உதிரிப்பாகங்களை வீட்டு வாசலுக்கே விநியோகிக்கும் சேவையை  அண்மையில் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிட்டட் நிறுவனம் அங்குரார்ப்பணம் செய்தது.

இந்தச் சேவையின் ஊடாக வாடிக்கையாளர்கள் பஜாஜ் அசல் உதிரிப்பாகங்களை வார நாட்களில் முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 5.00 வரையும், சனிக்கிழமைகளில் முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரையும் (வர்த்தக விடுமுறை தவிர) தமது வீட்டு வாசலுக்கே பெற்றுக்கொள்ள முடியும். ஓடர்களை வழங்குவதும், இதனைப் பெற்றுக் கொள்வதும் மிகவும் இலகுவானது. 0765 700600  என்ற இலக்கத்துக்கு ஓடர்களை வட்ஸ்அப் பண்ணுவதுடன், அவை அங்கீகரிக்கப்பட்டனவா என்பதை உடனடியாக அறிந்துகொள்ள முடியும். வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிவரை கிடைக்கப்பெறும் எந்தவொரு ஓடரும் 24 மணித்தியாலங்களுக்குள் விநியோகிக்கப்படும். நிபந்தனைக்கு உட்பட்டது.
விநியோகத்தின் போது சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் முழுமையாகப் பின்பற்றப்படும்.

அனைத்து உதிரிப்பாக காட்சியறைகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள விநியோக வலையமைப்பின் ஊடாக அனைத்து பஜாஜ் வாகனங்களுக்குமான உதிரிப்பாகங்கள் கிடைக்கப் பெறுவதையும் அவை உங்களின் வீட்டு வாசல்களுக்கே விநியோகிக்கப்படுவதையும் DPMC உறுதிப்படுத்துகிறது.

DPMC வர்த்தக நாமம் குறிக்கப்பட்ட குட்டி யானைச் சின்னம் மற்றும் பொதிகளில் காணப்படும் ஹொலோகிராம் ஸ்டிக்கர் என்பவற்றின் ஊடாக அசல் பஜாஜ் உதிரிப்பாகங்களை வாடிக்கையாளர்கள் இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதுடன், இது உண்மைத் தன்மையையும் உறுதிப்படுத்துகிறது.

Comments