பண்டிகைக் காலத்தில் பிரமாண்ட தள்ளுபடிகளுடன் பாரிய சலுகைகளை வழங்கும் Singer | தினகரன் வாரமஞ்சரி

பண்டிகைக் காலத்தில் பிரமாண்ட தள்ளுபடிகளுடன் பாரிய சலுகைகளை வழங்கும் Singer

நாட்டின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் விற்பனையாளரான Singer Sri Lanka PLC,  இந்த பண்டிகை காலத்தில் அதன் வாடிக்கையாளர்களை உற்சாகமூட்டும் வகையில்  நம்பமுடியாத பருவகால சலுகைகள் பலவற்றை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள Singer இன் காட்சியறை வலையமைப்புக்கு நேரடியாக வருகை தரும் மற்றும் www.singer.lk என்ற இணையத்தளம் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் தற்போது 25% வரையான விலைக்கழிவினைப் பெற்றுக் கொள்ள முடியுமென்பதுடன், தெரிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு 3 வருடம் வரையான பிரத்தியேக உத்தரவாதமும் வழங்கப்படுகின்றது.

நாடு முழுவதும் உள்ள காட்சியறை வலையமைப்பு மூலம் Singer தனது வாடிக்கையாளர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு எல்லையற்ற அளவிலான தயாரிப்புகளை பரிசாக வழங்க ஈடிணையற்ற பரிசு வவுச்சர்களையும் வழங்குகிறது. இந்த பரிசு வவுச்சர்கள் வெவ்வேறு பெறுமதியில் கிடைப்பதுடன், இவை  பரிசுகளை பெறுபவர்களே தமக்கான பரிசினை தெரிவு செய்ய வேண்டும் என விரும்பும் பரிசினை வழங்குபவர்களுக்கு சிறந்ததாகும்.

இந்த பண்டிகைக் காலத்தில், வட்டியில்லாத கொடுப்பனவு திட்டங்களுடன், தொலைக்காட்சிகள் மீது ரூ. 30,000 வரையிலும், சலவை இயந்திரங்களுக்கு ரூ. 26,000 வரையிலும் தள்ளுபடியை பெற்றுக்கொள்ள முடியும்.

இவற்றுக்கு மேலதிகமாக, எயார் கண்டிஷனர்களுக்கு ரூ. 15,000 வரையான தள்ளுபடி  மற்றும் வட்டி இல்லாத கட்டண திட்டங்கள், சுடுநீர் ஷவர்களுக்கு 10% வரை தள்ளுபடி மற்றும் சமையல் சாதனங்களுக்கு  25% வரை தள்ளுபடியையும் Singer வழங்குகின்றது. தெரிவு செய்யப்பட்ட தளபாடங்களுக்கு 20% வரையான தள்ளுபடி மற்றும் கடனட்டைகளுக்கு 60 மாதங்கள் வரையான தவணைக் கொடுப்பனவு திட்டங்கள் மற்றும் 18 மாதங்கள் வரையான இலகு கொடுப்பனவு திட்டங்களும் வழங்கப்படுகின்றன. குளிர்சாதன பெட்டிகளுக்கு, வாடிக்கையாளர்கள் தள்ளுபடிகள் மற்றும் வட்டி இல்லாத கட்டண திட்டங்கள் இரண்டையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இவற்றோடு டிஜிட்டல் தயாரிப்புகளுக்கு பல சலுகைகளையும் Singer வழங்கி வருகின்றது.

Comments