அழைத்திடும் பிரிவு | தினகரன் வாரமஞ்சரி

அழைத்திடும் பிரிவு

வலி மிகுந்தது வாழ்க்கை
வழிநெடுக புது முகங்கள் சந்திப்பு
வாழ்க்கையின் நடுவே
ஒவ்வோர் உறவையும் மனத்தில்
பதிவேற்றம் செய்யும்
மனம் எனும் மேடையில்
உறவுகள் பல, அது 
மயிலாக ஆடும்
குயிலாகப் பாடும் – பின்னர்
அங்கே யார் வந்து போனது
தெரியாமல் போய்விடும்
உறவுகள் பல வகை
எந்த உறவும் இறுதி வரை
துணையாக வரப் போவதில்லை
அந்த நாள் வரும்
நாம் பிரிந்ததாக வேண்டிய
நேரமும் வரும் – அந் நிலையில்
கடைசி வரை துணை யாரோ?

சின்னம்பிள்ளைச்சேனை சிறஹாப்தீன்  

Comments