ஒரு யாகம் | தினகரன் வாரமஞ்சரி

ஒரு யாகம்

கணங்களிடம் 
மௌனங்களை 
யாசித்த படி 
எனக்குள் 
ஒரு யாகம்.... 
இதழ்களின் 
மௌனத்தோடு 
இதயத்தின் 
மௌனமும் தான் 
என் வேண்டுதல்... 
காரணம் 
புரியாமல் 
சில நேரங்களில் 
அகிம்சைகளும் 
அந்நியப்பட்டு 
நிற்கிறதே 
என்னோடு...

அஷ்ரபா அலிறிஷாப் – அக்குறணை  

Comments