உற்சாகத்தில் நிதி அகர்வால் | தினகரன் வாரமஞ்சரி

உற்சாகத்தில் நிதி அகர்வால்

நடிகை நிதி அகர்வால் நடித்த இரண்டு தமிழ் படங்களும் ஒரே நாளில்  வெளியாவதால் அவர் உற்சாகத்தில் திளைத்துள்ளாராம்.

நடிகை நிதி அகர்வால் இந்தியில் மைக்கேல் என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான 'ஐ ஸ்மார்ட் சங்கர் படத்தில் நடித்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது மட்டுமன்றி வசூலையும் வாரிக் குவித்தது. நிதி அகர்வால் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன.

‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ படத்தின் வெற்றிக்கு பின் அவர் தமிழில் ஒப்பந்தமான முதல் படம் பூமி. ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள இப்படத்தை லட்சுமண் இயக்கி உள்ளார். கடந்த மே மாதமே இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில், பூமி படத்தை ஜனவரி 14ஆம் திகதி பொங்கலன்று நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இதேபோல் சுசீந்திரன் இயக்கத்தில் நிதி அகர்வால் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படமும் அதே நாளன்று தியேட்டரில் ரிலீசாக உள்ளது.

தான் நடித்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதால் நடிகை நிதி அகர்வால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளாராம்.

Comments