மிகச்சிறந்த இலங்கை பெருநிறுவனங்களுள் ஒன்றாக செலான் வங்கி | தினகரன் வாரமஞ்சரி

மிகச்சிறந்த இலங்கை பெருநிறுவனங்களுள் ஒன்றாக செலான் வங்கி

செலான் வங்கி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கான பிஸ்னஸ் டுடே முதல்-30 தரவரிசையில் இடம்பெற்றதன் மூலம் இந்நாட்டிலுள்ள மிகச்சிறந்த பெருநிறுவனங்களுள் ஒன்றாக தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வருடத்தில் முன்னெப்போதுமில்லாத நிகழ்வுகளால் சவால்கள் பல காணப்பட்ட போதிலும், நிலையான தன்மை மற்றும் நேர்த்தியை நோக்கிய தடுமாற்றமில்லாத அர்ப்பணிப்பு என்பன இச்சிறப்பு வாய்ந்த தரப்படுத்தலில் அன்புடன் அரவணைக்கும் வங்கியின் பிரசன்னத்தை உறுதிப்படுத்தியுள்ளன என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

செயற்திறன் மற்றும் சமூக முக்கியத்துவத்துடனான நிலைபேறான வணிக நடைமுறைகள் என்பவற்றைக் கொண்டு நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு 2019- ⁄ 2020 நிதியாண்டுக்கான தரப்படுத்தலில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் இடம்பெற்றன.

செலான் வங்கி புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் சேவை என்பவற்றில் முன்னிலை வகிப்பதுடன், பெருந்தொற்றினால் வரையறுக்கப்பட்ட செயற்பாட்டு சூழலில் தனது வாடிக்கையாளர்கள் சிறந்த சேவையைப் பெறுவதை உறுதி செய்ததுடன், அனைத்து நிதித் தேவைகளிலும் தனது வாடிக்கையாளர்களுக்கான ஆதரவைத் தொடர்ந்து வழங்கியது.

இவ்அங்கீகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட செலான் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில ஆரியரத்ன, “இந்நிதியாண்டு பூராகவும்  வங்கியானது முன்னர் எதிர்பார்த்திராத கிளர்ச்சியுடனான சவால்மிகு சூழலிலேயே செயற்பட்டு வருகின்றது.  சவால்கள் எம்மைச் சூழ்ந்திருந்தாலும், மிகக் கடினமான பொருளாதார நிலைகளைக் கடந்துவருவதற்கு எமது பரந்த வாடிக்கையாளர் வலையமைப்பிற்கு உதவுதல் என்ற வகையிலும் செலான் அணியினரது முயற்சிகளுக்கு நான் நன்றியுடையவனாவேன்.

எமது பிரசன்னமானது இந்த ஆகஸ்ட் தரப்படுத்தலில் நாம் சரியான பாதையில் இருக்கிறோம் என்பதற்கானதும், புத்தாக்கம் மற்றும் வளர்ச்சி மனநிலையுடன் உச்சத்திற்கு வருவோம் என்பதற்கானதுமான உறுதிச்சான்றாகும்.” எனத் தெரிவித்தார்.

செலான் வங்கியினது சமூகப் பொறுப்பையும் கருத்திற்கொண்டே உயர் பெருநிறுவனம் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இவ்வருடம்,  வணிகச் செயற்பாட்டிலிருந்து சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்களை குறைப்பதன் ஊடாக நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் மற்றும் சமூகக் கொள்கையொன்றை செலான் வங்கி உருவாக்கி நடைமுறைப்படுத்தியது.

இக்கொள்கையானது சுற்றுச்சூழலைப் பாதுகாத்து பொருளாதாரச் செழிப்பை உருவாக்குவதற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.

Comments