தமிழனுக்கோர் தனி மகுடம் தமிழ் புதுநாள் தைப்பொங்கல் | தினகரன் வாரமஞ்சரி

தமிழனுக்கோர் தனி மகுடம் தமிழ் புதுநாள் தைப்பொங்கல்

பொங்கலோ பொங்கல்
எனக் கூக்குரலிட்டு கூடி வாழ்ந்த
சந்தோஷம் பெற்றிடவே
வந்திடும் நாள் தைப்பொங்கல்...
தரணியிலே கதனகுதூகலமாக
தைவதம் போல இனித்திடும்
நல்ல சிந்தனைகளைத் தந்திடுமே
தைத்திருநாள் தைப்பொங்கல்...
பிரகாசமான சூரியனுக்கும்
பிள்ளை மனம் கொண்ட உழவர்களுக்கும்
நன்றி மறவாமையை போதித்திடுமே
உழவர்களின் சூரியப்பொங்கல்
திக்கெட்டிலும் பக்ஷணங்கள் படைத்து
பலவிதமான பூஜைகள் புனைந்து
புத்தாண்டாக கொண்டாடிடுவோமே
கோலாகலமான தைப்பொங்கல்....

சண்முகநாதன் ஷ்யாம் தேவ், மாத்தளை.

Comments