பார்போற்றும் பசுப்பொங்கல் | தினகரன் வாரமஞ்சரி

பார்போற்றும் பசுப்பொங்கல்

ஆவினமும் ஆதரித்து
அதுகமேலயும் அன்புவைச்சி
ஆண்டுக்கொரு பூஜைபோட்டு
அதுகளுக்கும் நன்றிகூறும்
நம்மவர் பாரம்பரியம்
பார்போற்றும் பண்டிகையாம்...
தைப்பொங்கல் பண்டிகையாம்...
தத்துவப் பண்டிகையாம்...
மாவிலை தோரணமும்....
மாட்டுக் கொம்பின் பூ வர்ணமும்...
மற்றிலா மகிழ்ச்சியும் பொங்குதுபார்...
செங்கரும்பு சேர்த்தெடுத்து...
செவப்பு நெற பொட்டுவைச்சி...
புதுமண்பானை வாங்கிவச்சி...
மஞ்சளையும் கட்டிவைச்சி...
செங்கல்ல அடுக்கிவைச்சி...
பச்சரிசி கல்லரிச்சி
கறுப்பரிசி களைஞ்செடுத்து
பக்குவமா அதகழுவி
சேர்த்தெடுத்த சுள்ளிக்கட்டால்
சுடச்சுட சோத்தபொங்கி...
கருப்பட்டி, சீனி சேர்த்து...
மரமுந்திரிகை மணமணக்க...
கையளவு பேரீச்சம் கஜுவையும்
கலந்தெடுத்து கிளறிவிட்டால்
கமகமக்கும்...
வாசனையோ தூள்பறக்கும்...
வண்டுகள் மொய்மொய்க்கும்...
பல வண்ணங்களில் தித்திக்கும்...
வெண்பொங்கல் வேறையா
ஆக்கிவைத்து கைகொட்டி
பொங்கலோ பொங்கலோ எனப் பொங்கி...
வாழையில வெட்டிவச்சி...
வகைவகையாய் பட்சணம் வைத்து...
விருந்தினர்களிக்கும்
விருந்தோம்பல் பண்பாடு;
வியக்கவைக்கும் விநோதம்;
பொங்கல் பொங்கட்டும்...
புதுதெம்பு தங்கட்டும்...
கொடிய கொரோனா ஒழியட்டும்...

சுந்தரராஜ் சுபாஷினி
வோல்ட்றிம் லிந்துல.

Comments