பொங்கலோ பொங்கல்... | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

பொங்கலோ பொங்கல்...

கதிரவன் உதித்தான்
காலையும் புலர்ந்தது
கதனகுதூகல தைப்பொங்கல்....

ஆதவன் சூரியன்
ஆனந்தம் பொங்கவே
ஆச்சரியம் தந்ததே தைப்பொங்கல்...

ஆயிரம் தாமரை
ஆயிரம் இதழ்களில்
ஆயிரமாயிரம் வண்டு மொய்க்க
ஆயிரமாண்டுகள் புராதனமான
ஆகர்ஷணமான தைப்பொங்கல்...

பூவினம் பூங்குயில்
உழவரும் உயிர்களும்
கொண்டாடக் கூடினர்
கோபுர வாசலில்....

ஆவினம் பூவினம்
யாவரும் காணவே
ஆடி வருகிறாள் தைப்பொங்கல்...

கல்கண்டு சாதம் கரும்பும் இனிக்க
நெய்யால் சர்க்கரை
பொங்கல் செய்தே
கலைஞர்கள் கலை வளர்க்க
நர்த்தனமாடியே வருகிறாள்
தைப்பொங்கல்....

பொங்கலோ பொங்கல்....
பொங்கலோ பொங்கல்....

மணிவேல் பிரபாலேந்திரன், கொட்டகலை

Comments