அலியான்ஸின் காலி மாத்தறை கிளைகள் இடம்மாற்றம் | தினகரன் வாரமஞ்சரி

அலியான்ஸின் காலி மாத்தறை கிளைகள் இடம்மாற்றம்

அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் (அலியான்ஸ் லங்கா), ஒவ்வொரு தொடுபுள்ளிகளிலும் வாடிக்கையாளர் சேவை மற்றும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக தனது புதிய காலி மற்றும் மாத்தறை கிளை அலுவலகங்களை அண்மையில் திறந்துள்ளது.

அலியான்ஸ் இன்சுூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கானி சுப்பிரமணியம், அலியான்ஸ் லைஃப் இன்சுூரன்ஸ் லங்காலிமிட்டெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெயலால் ஹேவாவசம்், அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் தேசிய தலைமை விற்பனை அதிகாரியான டென்னிஸ் ஹேவாகம், அலியான்ஸ் லங்கா அணியின் அங்கத்தவர்கள் மற்றும் பிறமுக்கிய பங்குதாரர்களும் இந்த இரு அலுவலகங்களின் வைபவரீதியான திறப்பு விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

இரு கிளைகளும் வசதியாக மேலும் அணுகக்கூடிய மற்றும் விசாலமான இட வசதி கொண்ட வளாகத்தில் அமையப்பெற்றுள்ளன.

அலியான்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட, காப்புறுதி நிபுணர்களின் வல்லுனர் அணிகளால் வழங்கப்படும் அலியான்ஸ் லங்காவின் உலகத்தரம் வாய்ந்த காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளின் ஒட்டுமொத்த தீர்வுகளையும் இவை வழங்கும்.

அதன் தற்போதைய கிளை வலையமைப்பு வளர்ச்சிப்படிமாற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக, அலியான்ஸ் லங்கா அதன் மறுசீரமைக்கப்பட்ட கிளை அமைவிடங்களில் வர்த்தகநாமத்தின் அடையாளத்தை நவீனகாலத்திற்கு ஏற்ப புதிய தோற்றம் மற்றும் சமகால வடிவமைப்புடன் மேம்படுத்தி வருகிறது.

இது குறித்து கானிசுப்பிரமணியம் கூறுகையில்,உலகெங்கிலும், மக்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்கும், வாடிக்கையாளர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படும் எதற்கும் முகங்கொடுக்கும் தைரியத்தை அளிப்பதற்கும் அலியான்ஸில் நாம் கடுமையாக உழைத்து வருகிறோம் என்றார்.

Comments