மூலதன சந்தையில் புதிய மைல்கல்லை அடைந்துள்ள SDB வங்கி | தினகரன் வாரமஞ்சரி

மூலதன சந்தையில் புதிய மைல்கல்லை அடைந்துள்ள SDB வங்கி

கொவிட் 19 தொற்று நோய் நிலவுகின்ற நிலையிலும், SDB வங்கியானது தனது உரிமை வழங்கலை வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது. இதன்போது ரூபா 1.5 பில்லியனை திரட்டுவதற்கு வங்கியால் முடிந்தது. இப்புதிய அணுகுமுறை தொடர்பில் தொழிற்துறை முழுவதிலும் பாராட்டும், பங்குதாரர்கள் மத்தியில் பாரிய வரவேற்பும் கிடைத்துள்ளது.

இதன் மூலம் SDB வங்கியானது, மூலதன சந்தையில் டிஜிட்டல் முறையில் வெற்றிகரமாக பங்கு வழங்கலை நடாத்திய, கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதலாவது நிறுவனம் என சந்தை வரலாற்றில் தனது பெயரை நிலைநிறுத்தியுள்ளதுடன், முதன்மை பங்காளர்களுக்கான முதலாவது டிஜிட்டல் பங்கு வழங்கல் நிகழ்வாக இது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

நவம்பர் மாத ஆரம்பத்தில், SDB வங்கியானது, கொழும்பு பங்குச்சந்தையுடன் (CSE) ஒருங்கிணைந்து தமது பங்குதாரர்களுக்கு அவர்களின் உரிமைகள் மற்றும் மேலதிக பங்குகளை முழுமையாக டிஜிட்டல் முறையில் பயன்படுத்த முடியும் எனும் சிறப்பானதொரு தீர்மானத்தினை அறிவித்திருந்தது.

CDS கணக்கு வைத்திருப்பவர்களுக்கு Central Depository System (CDS) மூலமாக நிகழ்நிலை (Online) முறையில் விண்ணப்பத்தை அனுமதிக்கும் வகையிலும், CDS கணக்கு அல்லாதவர்களுக்கு SDB வங்கியால் உருவாக்கப்பட்ட பிரத்தியேக நிகழ்நிலை (Online) முறை வழியாக நிகழ்நிலை (Online) விண்ணப்பத்தை அனுமதிக்கும் வகையிலும் இச்செயல்முறைக்கென தனியான கணினி மென்பொருள் அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான அறிவிப்புக்கு பங்குதாரர்கள் பெருமளவில் பதிலளித்தனர். எனவே, உள்நாட்டில் டிஜிடல் உரிமை வழங்கலை முதலில் வழங்கியதாக இது அமைந்திருக்கின்றது. SDB வங்கியானது டிஜிடல் முறைமையின் பிரகாரம் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பல நடவடிக்கைகளை முதன் முதலாக எடுத்திருக்கின்றமை வரவேற்கப்படும் ஒரு விடயமாகும்.

Comments