7,000 புள்ளிகளை கடந்தது பங்கு விலைச்சுட்டி | Page 3 | தினகரன் வாரமஞ்சரி

7,000 புள்ளிகளை கடந்தது பங்கு விலைச்சுட்டி

அனைத்துப்பங்கு விலைசுட்டியானது 2015 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதிக்குப் பின்னர் கடந்த 6 ஆம்திகதி முதற் தடவையாக 7,000 புள்ளிகளைக் கடந்து 7,036.76 புள்ளிகளுடன் நிறைவுற்றது. அனைத்துப் பங்குவிலைசுட்டி 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி முதற் தடவையாக 7,000 புள்ளிகளைக் கடந்ததோடு 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி அதன் உச்சப் பெறுமதியாக 7,811.80 புள்ளிகளை அடைந்திருந்தது. 2020 ஆம் ஆண்டிலிருந்து விலைச்சுட்டிகள் மற்றும் மொத்த சந்தை நடவடிக்கைகளின் மேல்நோக்கிய செயற்பாடுகள் தொடர்ந்திருந்ததுடன் 2021 ஆண்டின் முதல் மூன்று நாட்களில் அனைத்துப் பங்குவிலைச் சுட்டி 4% வளர்ச்சியை பதிவு செய்திருந்ததோடு ரூபா. 18 பில்லியன் மொத்த புரள்வினை சந்தை தோற்றுவித்திருந்தது.

கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பாரிய மற்றும் அதிக திரவத்தன்மைக் கொண்ட 20 கம்பனிகளை உள்ளடக்கிய S&P SL20 விலைச்சுட்டி இன்று 4 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்திருந்ததோடு 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட தொற்றுநோய் தாக்கத்தின் விளைவாக வீழ்ச்சியடைந்திருந்த விலைச்சுட்டி கடந்த மூன்று நாட்களில் 2.4% வளர்ச்சியுடன் இன்று 2,703.19 புள்ளிகளுடன் நிறைவுற்றிருந்தது. கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் மொத்த சந்தை மூலதனவாக்கம் கடந்த மூன்று நாட்களில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்து இந்த வருடத்திற்கு ரூபா. 115 பில்லியனை அதிகரித்திருந்ததுடன் ரூபா. 3.08 ட்ரில்லியனுடன் நிறைவுற்றிருந்தது. இது 2018 ஏப்ரல் மாதத்திலிருந்தான உயர்ப் பெறுமதியாகும்.

சந்தை செயல்திறன் குறித்து கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க தெரிவிக்கையில்கடந்தாண்டின் நடுப்பகுதியில் இருந்து பதிவு செய்யப்பட்ட அதிகளவான வியாபாரப் பங்குகளின் எண்ணிக்கை மற்றும் சந்தை செயற்பாடுகளால் நாங்கள் பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறோம்.

Comments