பிறப்பின் தாற்பரியம் | தினகரன் வாரமஞ்சரி

பிறப்பின் தாற்பரியம்

நொடிக்குள்
வந்துபோகும் சோகங்கள்
இன்பங்கள் என்றும்
முற்றுப் பெறுவதில்லை
அடுத்த நொடிக்குள்ளும்
ஆலவிருட்சமாய்
அவை வளர
காத்திருக்கின்றன
தொடரும் வாழ்வில்
எதுவும் நிலைப்பதில்லை
முற்றுப் பெறுவதில்லை
வளரும் அலைபோல்
செல்லும் இடமெல்லாம்
பின்வரும் நிழல்போல்
அவை சாகாவரம் பெற்று
மீண்டும் மீண்டும்
பிறப்பெடுக்கின்றன
இயற்கை நியதியை
உணர்ந்து வாழ்வதும்
இறைநியதி யென
அமைதி பெறுவதும்
அர்த்தப்படுத்தப்பட்ட
நிதர்சனங்கள்
பிறப்பின் தாய்பரியத்தை
புரிய வைக்கும்
இலட்சணங்கள்

அலிறிஸாப், அக்குறணை

Comments