பெண்ணே...! | தினகரன் வாரமஞ்சரி

பெண்ணே...!

பெண்ணே பெண்ணாக பிறந்து
விட்டேன!
கண்ணீரும் மௌனமும்
தான் வாழ்க்கை என்று
நினைத்து
ஏமாந்து விடாதே!
ஒரு முறை உலகத்தை
நிமிர்ந்து பார்
அப்பொழுது புரியும்...!
மௌனம் என்பது
ஆயுதத்திலும் பெரிய ஆயுதம்
அமைதியாய் இரு!
ஆயினும் உன்விழிகளை
நீரோடையாக்கி விடாதே
ஆண்கள் அதில்
குளித்து விடப் பார்ப்பார்கள்
உன் பார்வையை நெருப்பாக்கி விடு
உன்னை
யாரும் நெருங்க மாட்டார்கள்
உனக்கும் இந்த பூலோகத்தில்
தலைநிமிர்ந்து
நடக்க முடியும்

மனோன்மணி நாகராசா, நீர்கொழும்பு.

Comments