கம்பஹாவில் தனியார் நிதி நிறுவனத்தில் பாரிய கொள்ளை | தினகரன் வாரமஞ்சரி

கம்பஹாவில் தனியார் நிதி நிறுவனத்தில் பாரிய கொள்ளை

கம்பஹா - மிரிஸ்வத்த பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். முகத்தை முழுமையாக மூடிய தலைக்கவசம் மற்றும் கறுப்பு நிற ஜெக்கட் அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து ஆயுத முனையில் இக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். நேற்று மதியம் பரபரப்பான சூழலில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முகத்தை முழுவதுமாக மறைக்க கூடிய முகக் கவசம் மற்றும் கருப்பு ஆடை அணிந்து வந்த இருவர் நிதி நிறுவனத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதை அங்கே பொருத்தப்பட்டிருந்த சீசீரிவி கமராக்களில் பதிவாகியிருந்தது.

சம்பவம் தொடர்பில் 5 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Comments