ஒற்றைச் சிறகினில் சிறகடித்தல்...! | தினகரன் வாரமஞ்சரி

ஒற்றைச் சிறகினில் சிறகடித்தல்...!

கண்டிப்பாக என் சில கவிதைகள்
உன்மனத்தைக் காயப்படுத்தி இருக்கலாம்
அது நீ தந்த வலிகளால்
வந்த வரிகள் என்பதால்!
என்றாலும் நீ சரிப்படுவாயா என்பதும்
சந்தேகம் தான் – ஏனெனில்
தவறுகளைச் சரியென செய்து
செல்பவரே சரியானவராய்
உலகில் தன்னைத் தானே
தீர்மானித்துக் கொள்வதால்...
ப்ரியமானவளே-
கண்ணில்பட்ட ரோஜாவை
கைகள் தொடுகையில்
முட்கள் தெரிகையில் வருகின்ற
அவதானமாய் உன் பிரிவையும்
என் வாழ்வின் ஒரு பாடமாய்
எடுத்துக்கொண்டு ஒற்றை
சிறகினில் சிறகடிக்கும் நான்
நகர்ந்து சென்றதைவிட
நிலத்தில் வீழ்ந்ததுவே அதிகம்!

சி. எம். சங்கர்
பண்டாரவளை

Comments