நவீனத்தின் வடிவத்தில் நசுங்கும் இதயங்கள் | தினகரன் வாரமஞ்சரி

நவீனத்தின் வடிவத்தில் நசுங்கும் இதயங்கள்

என் தாய் வீட்டுச் சாலையில்
பளிங்காய் மின்னிய பசுமைகள்
வெறுமைகளாயிற்று!
கட்டடங்களின் கனதியால்
வானுயர்ந்த மரங்களை
ஆக்கிரமித்ததில்
இன்னிசை வழங்கிய
பறவைகளைக் காண்பதற்கு
உள்ளம் துடிக்கின்றது
ஆந்தைகளைப் போல்
அங்குமிங்கும் கண்காணிப்புக் கமராக்கள்
முரட்டுப் பார்வையால் பயமுறுத்துகின்றது
ருசித்து உண்ட பழங்களை
நினைக்கையில் நாவில்
எச்சில் சுரக்கின்றது!
கனவிலும் கிடைக்காத
கருப் பொருளாய்ப் போனது!
உற்சாகமாய்த் துள்ளி
விளையாடிய நிழல்களும்
இப்போது ஒளிந்திருக்கிறது
திறன் பேசிகளுடன்
எஞ்சியிருக்கும் மரங்களும்
அபிவிருத்திகளுக்கென
அடையாளமிடப்பட்டு
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
இந்நிலை தொடர்ந்தால்
நிம்மதி தொலையுமென
உள்மனம் சொல்கின்றது!

ஏ.ரி.எம். 

Comments