நாணயத்தின் தோற்றமும் புழக்கமும் | தினகரன் வாரமஞ்சரி

நாணயத்தின் தோற்றமும் புழக்கமும்

'நாணயம்' எனக் குறிப்பிடப்படுகின்ற நாணயக் குற்றிகளும் நாணயத் தாள்களும் கொடுப்பனவுக் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பண்டமாற்று முறையிலிருந்து ஆரம்பித்த கொடுக்கல் வாங்கல் முறையானது படிப்படியாக வளர்ச்சியடைந்து, நாம் பயன்படுத்துகின்ற பண்டங்களை/பொருட்களை பரிமாற்றம் செய்வதற்கான, ஒரு பெறுமதியுள்ள பொருளைப் பயன்படுத்துதல் இதன் முதலாவது கட்டமாக இருந்தது.  

காலம் செல்லச் செல்ல, உலகில் கொடுக்கல் வாங்கல் முறைகள் விரிவடைந்தமையால், குறைந்த செலவில் நாணயத்தைத் தயாரிக்கின்ற தேவை உருவாகியது. இது கடதாசியில் அச்சிடப்படுகின்ற நாணயத் தாள்கள் உருவாகுவதற்கு வழிவகுத்தது. 1785 மே மாதம் 10ஆம் திகதி இலங்கையில் முதற் தடவையாக ஒரு நாணயத்தாள் வெளியிடப்பட்டதற்கான சான்றுகள் உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் வெளியிடப்பட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    இலங்கையில் ரூபா, சதம் முறை 1872 ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்தே பயன்பாட்டுக்கு வந்ததுடன் ஒரு ரூபா 100 சதங்களாக பெறுமதியிடப்பட்டது. 1884ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க கடதாசி நாணயத்தாள் சட்ட விதியால் நிறுவப்பட்ட நாணய ஆணையாளர்களின் பணியாக இருந்த இலங்கையில் நாணயங்கள் வெளியிடுகின்ற பணியை, 1950 ஒகஸ்ட் 28ஆம் திகதி தாபிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கி முழுமையாகப் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ஏ.எச். அப்துல் அலீம்,  
அலிகார் தேசிய கல்லூரி,
ஏறாவூர்.   

Comments