தகனம் செய்யப்படுவது குறித்து கவலைப்படும் UK அமைச்சர் அஹமட் | தினகரன் வாரமஞ்சரி

தகனம் செய்யப்படுவது குறித்து கவலைப்படும் UK அமைச்சர் அஹமட்

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மரணிக்கும் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்யும் நடைமுறை தொடர்பில் பிரிட்டன் கவலை வெளியிட்டுள்ளது. மனித உரிமைகளுக்கான பிரிட்டன் அமைச்சர் அஹமட் பிரபு இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சருடனான தொலைபேசி உரையாடலின் போது இது குறித்து தனது கரிசனையை வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments