பத்து கோடியை நெருங்கும் கொரோனா தொற்றாளர் | தினகரன் வாரமஞ்சரி

பத்து கோடியை நெருங்கும் கொரோனா தொற்றாளர்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 09 கோடி 87 இலட்சத்து 36 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 07 கோடி 09 இலட்சத்து 11 ஆயிரத்து 582 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்கலுக்கு இது வரை 21 இலட்சத்து 16 ஆயிரத்து 159 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 02 கோடி 57 இலட்சத்து 09 ஆயிரத்து 254 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 01 இலட்சத்து 11 ஆயிரத்து 239 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

நாடுகளில் அமெரிக்கா - 25,390,042 , இந்தியா - 10,640,544, பிரேசில் - 8,755,133, ரஷ்யா - 3,677,352, பிரிட்டன் - 3,583,907, பிரான்ஸ் - 3,011,257, ஸ்பெயின் - 2,603,472, இத்தாலி - 2,441,854, துருக்கி - 2,418,472, ஜெர்மனி - 2,125,261 என்பன பதிவாகியுள்ளன.

கொரோனா உயிரிழப்பு அதிகமுள்ள நாடுகளில் அமெரிக்கா - 424,177, பிரேசில் - 215,299, இந்தியா - 153,221, மேக்சிகோ- 147,614, பிரிட்டன் - 95,981, இத்தாலி - 84,674, பிரான்ஸ் - 72,647 என்பன பதிவாகியுள்ளன.

கொரோனாவிலிருந்து அதிகம் குணமடைந்த நாடுகள் பட்டியலில்

அமெரிக்கா - 15,222,719, இந்தியா - 10,300,063, பிரேசில் - 7,594,771, ரஷ்யா - 3,081,536, துருக்கி - 2,296,050 என்றும் பதிவாகியுள்ளது.

Comments