புதனன்று வருகிறது கொரோனா தடுப்பூசி | தினகரன் வாரமஞ்சரி

புதனன்று வருகிறது கொரோனா தடுப்பூசி

இந்தியாவிலிருந்து 6,00,000 ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ரா செனெகா (Oxford-Astra Zeneca )கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை 6,00,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

ஒக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ரா செனெகா (Oxford -Astra Zeneca) தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த இலங்கை அரசாங்கம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.

களுத்துறை – வலல்லாவிட்ட பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு பேசும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவற்றில் மூன்று இலட்சம் தடுப்பூசிகளை இந்தியா இலங்கைக்கு இலவசமாக வழங்குகிறது.

தடுப்பூசி கிடைக்கப்பெற்ற மறுநாள் முதல் அதனை மக்களுக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார். முதல் கட்டமாக வைத்தியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதிகளுக்கும் வழங்கப்படும்.

அதன் பின்னர் இராணுவம், பொலிஸாருக்கும் செலுத்தப்பட்டு வயோதிபர்களுக்கும் செலுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதனையடுத்து, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Comments