மறைந்த எட்வினுக்கு பூரண அரசமரியாதை | தினகரன் வாரமஞ்சரி

மறைந்த எட்வினுக்கு பூரண அரசமரியாதை

இலங்கையின் சிரேஷ்ட பத்திரிகையாளரும், திரைப்பட விமர்சகரும், ஊடகவியலாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஆசிரியருமான கலாநிதி எட்வின் ஆரியதாசவின் இறுதி கிரியைகளை அரச அனுசரணையுடன் முன்னெடுப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று (23) ஆலோசனை வழங்கியுள்ளார்.

வெகுஜன தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகதுறை யில் விரிவான அனுபவம் மற்றும் தனித்துவமான அறிவை சமூகத்திற்கு அர்ப்பணித்த தீவிர மற்றும் சிரேஷ்ட பத்திரிகையாளரின் இறுதி கிரியைகளை புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் ஊடக அமைச்சு இணைந்து முன்னெடுக்கும்.

அது தொடர்பில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவுக்கும், ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ.விஜேவீரவுக்கும் நேற்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments