கொழும்பு துறைமுக நகரத்தை ஈர்த்த உலகின் உச்சமுதலீட்டாளரான நதானியேல் ரோத்ஸ்சைல்ட்டை | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு துறைமுக நகரத்தை ஈர்த்த உலகின் உச்சமுதலீட்டாளரான நதானியேல் ரோத்ஸ்சைல்ட்டை

உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளரும் ரோத்ஸ்சைல்ட் குடும்ப உறுப்பினருமான நதானியேல் ரோத்ஸ்சைல்ட் குறுகிய வணிக சுற்றுப்பயணத்திற்காக இலங்கைக்கு வந்துள்ள நிலையில் வியாழக்கிழமை (14 ஆம் திகதி) கொழும்பு துறைமுக நகரத்திற்கு விஜயம் செய்தார். 

அவருடன் இலங்கையில் பிறந்த பிரபல பிரித்தானிய அரசியல்வாதியும் முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினருமான நிரஞ்சன் தேவாஆதித்ய மற்றும் வர்த்தகத்துறை விற்பன்னரான ராஜன் பிரிட்டோ ஆகியோரும் அவருடன் இணைந்து கொண்டனர். 

ரோத்ஸ்சைல்ட் உள்ளிட்ட குழுவினரை கொழும்பு துறைமுகநகரத்தின் நிர்வாக செயற்திட்டப் பணிப்பாளர் ராஜா எதிரிசூரிய மற்றும் CHEC Port City Colombo நிறுவனத்தின் உதவி முகாமைத்துவப் பணிப்பாளர் யுூ யெக்கிங் மற்றும் துறைமுக நகரத்தின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.  

கொழும்பு துறைமுகநகர செயற்திட்டம் மற்றும் அதன் கட்டுமான வளர்ச்சிப்படி மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இக்குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

ரோத்ஸ்சைல்ட் இந்த செயற்திட்டத்தின் பால், குறிப்பாக பொழுதுபோக்கு கப்பற்துறை மற்றும் விருந்தோம்பல் நிலத் திட்டங்கள் பால் மிகவும் ஈர்க்கப்பட்டார்.   ரோத்ஸ்சைல்ட் குடும்பம் உலகெங்கிலும் உள்ள பல்வகைப்பட்ட வணிகத்திற்காக மிகவும் பிரபலமானது, இதில் பிரபலமான ரோத்ஸ்சைல்ட் வங்கி மற்றும் அட்ரியாடிக் கடலில் உள்ள ஆடம்பர படகு மற்றும் குடியிருப்பு செயற்திட்டமான மாண்டினீக்ரோ துறைமுகம் (Port Montenegro) ஆகியனவும் அடங்கியுள்ளன.  

Comments