ஒப்பிடமுடியாத வாடிக்கையாளர் அனுபவத்துடன் புதுப்பிக்கப்பட்ட செலான் வங்கி இணையதளம் | தினகரன் வாரமஞ்சரி

ஒப்பிடமுடியாத வாடிக்கையாளர் அனுபவத்துடன் புதுப்பிக்கப்பட்ட செலான் வங்கி இணையதளம்

இலங்கையில் வங்கித் துறையில் முன்னோடியாக திகழும் செலான் வங்கி, புதுப்பிக்கப்பட்ட www.seylan.lk இணையத்தளத்தை, நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் 2021 ஜனவரி 01 ஆம் திகதி செலான் தலைமை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தியது.

புதுப்பிக்கப்பட்ட தளம் வாடிக்கையாளர்களுக்கு விரல் நுனியில் புதிய அளவிலான வசதியை அனுபவிக்க உதவுகிறது, மேலும் எச்சரிக்கையுடன் செயல்பட தேவையான இக்காலத்தில் வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துகிறது.

மொபைல் போன் மற்றும் அனைத்து நவீன ப்ரவ்சர்கள் மூலமாக இலகுவாக அணுகக்கூடிய டிஜிட்டல் தளத்தை கொண்டுவருவதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் வலைத்தளத்தை மறுசீரமைக்க செலான் குழு நடவடிக்கை எடுத்தது. www.seylan.lk தளம் இப்போது பெருநிறுவன, வணிக மற்றும் தனிநபர் சேவைகளை வேறுபட்ட பிரிவுகளின் கீழ் எளிதான அணுகலுக்கான மேம்பட்ட வசதியை கொண்டுள்ளது மற்றும் புதுப்பிக்கப்பட்ட இடைமுகம் (interface) தற்போதுள்ள மற்றும் புதிய பயனர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன் செட் செயல்பாடு மூலம் பயனர்களுக்கான தீர்வுகளை வழங்கும் இப் புதிய தளம் ஒரு மெய்நிகர் வங்கி கிளையின் இடத்தை வகிக்கிறது, மேலும் இது தகவல் பெற்றுக்கொள்ள அல்லது அன்றாட வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கி கிளையை அணுக வேண்டிய அவசியத்தைத் தவிர்க்கிறது. இந்த அம்சங்கள், அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கிக்கு மிக முக்கியமான, உலகளாவிய தொற்றுநோயின் போது வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வையும் உறுதி செய்கிறது.

அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான தயாரிப்புகள் மற்றும் வகுப்பில் சிறந்த சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உன்னத வங்கி அனுபவத்தை வழங்குவதற்கான தொலைநோக்குடன் செயல்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர, சில்லறை மற்றும் நிறுவனங்கள் என வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி, 173 கிளைகள் மற்றும் நாடு முழுவதும் பரந்துள்ள 70 பண வைப்பு இயந்திரங்கள், 66 காசோலை வைப்பு இயந்திரங்கள் மற்றும் 216 ATMகள் கொண்ட வலையமைப்புடன் அதன் கால்தடத்தை விரிவுபடுத்தியுள்ளது.

Comments