பன்னிபிட்டியில் ஆறுமாடி அதிசொகுசு முதியோர் இல்லம் | தினகரன் வாரமஞ்சரி

பன்னிபிட்டியில் ஆறுமாடி அதிசொகுசு முதியோர் இல்லம்

இலங்கையின் முதன்மையான முதியோர் பராமரிப்பு நிறுவனமான ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனமானது, சர்வதேச சுகாதாரச் சேவைகள் நியமங்களுக்குமைய அதிசொகுசு முதியோர் இல்லமொன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகாரத்துடன் 7.5 மில்லியன் டொலர் முதலீட்டில் ஹைலெவல் வீதிக்கு முகப்பாக பன்னிபிட்டியவில் ஒரு ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்படும் ஆறு மாடி அதிசொகுசு முதியோர் இல்லத்தில் குளியலறை மற்றும் பெல்கனியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட 200 அறைகள், சுகாதார பராமரிப்பு நிலையம், நீச்சல் தடாகம், உடற்பயிற்சிக் கூடம், வெளி மற்றும் உள்ளக பூங்காக்கள், நூலகம், முதியோர் சிறப்பு நிபுணத்துவ மருத்துவ ஆலோசனை நிலையம், இயன் மருத்துவ நிலையம், மருந்தகம்,மருத்துவ உபகரண விற்பனை நிலையம், பிரமாண்டமான வரவேற்புக் கூடம், புபே முறையிலான உணவு வழங்கும் உணவகம் மற்றும் சிறிய திரைப்படக் கூடம் ஆகிய வசதிகள் உள்ளன.

ரோயல் நர்சிங் ஹோம் தனியார் நிறுவனத்தின் (www.royalnursinghome.com) ஸ்தாபகத் தலைவரான மனுஜ ஹேவாவசம் கருத்து தெரிவிக்கையில், எமது நாட்டின் முதியோர் பராமரிப்புச் சேவையின் தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிரேஷ்ட பிரஜைகளுக்கு சர்வதேச தரத்திலான சேவையினை வழங்குவதே தமது நோக்கம் எனவும் குறிப்பிட்டார். மனுஜ ஹேவாவசம் இந்தியாவின் கான்பூர் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாக பட்டதாரியாக உள்ளதோடு சிங்கப்பூர் நாட்டின் Parkway கல்லுௗரியில் சுகாதார பராமரிப்பு முகாமைத்துவம் மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப பீடத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றவர்.

இலங்கை இளைஞர், யுவதிகள் உயர் கல்வி கற்பதற்கு வெளிநாடுகளுக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக குடியேறிவிடுவதும் இலங்கைவாழ் முதியோர் சனத்தொகை சடுதியாக அதிகரிப்பதுமே முதியோர் பராமரிப்புச் சேவையின் தேவை அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது.

Comments