டெக்கின் பல்கலைக்கழகத்துடன் பங்குடமையை பலப்படுத்தும் இலங்கை தொழில்நுட்ப நிறுவனம் | தினகரன் வாரமஞ்சரி

டெக்கின் பல்கலைக்கழகத்துடன் பங்குடமையை பலப்படுத்தும் இலங்கை தொழில்நுட்ப நிறுவனம்

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர் கல்வியை வழங்குவதில் தரம் பெற்றுத் திகழும் நாட்டின் முன்னோடியான இலங்கை தொழில்நுட்ப நிறுவனம் (SLTC), அண்மையில் கொழும்பு, SLTC ட்ரேட் எஸ்ட்பேட் சிட்டியில் நடைப்பெற்ற மெய்நிகர் நிகழ்வில் அவுஸ்திரேலியவிருப்புக்குரிய டெக்கின் பல்கலைக்கழகத்துடன் தனது பங்குடமையை புதுப்பித்துள்ளது. டெக்கின் பல்கலைக்கழகமானது அவுஸ்திரேலியாவில் கல்வித் தரத்திலும் மாணவர் திருப்தியிலும் சிறந்த தரப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்கிறது.  

இந்த பங்குடமையானது கல்விப்பீடம், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உலகத்தரம் பெற்ற சர்வதேசக்கல்வி, வளங்கள் மற்றும் உள்நாட்டு மாணவர்கள் உயர் கல்வியை பூர்த்தி செய்வதை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகளை அணுகக்கூடிய மையமாக செயற்படவுள்ள உலக கல்வி நிலையத்தின் (CGE) அங்குரார்ப்பணத்துடன் கைச்சாத்திடப்பட்டது. 

இந்த பங்குடமையின் மிகைப்படுத்தலாக இரண்டு பல்கலைக்கழகங்களினதும் கல்வியியலாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் சாட்சிகளாக செயற்பட்டனர்; டெக்கின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கேரி ஸ்மித், பிரதி துணை வேந்தர் உலகளாவிய ஒருங்கிணைப்பு, மற்றும் SLTCயின் சார்பில் ஸ்தாபகத் தலைவரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான பொறியியலாளர் ரஞ்சித் ஜி.ரூபசிங்க ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.  டெக்கின் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பங்குடமைகள், விஞ்ஞான,பொறியியல் மற்றும் கட்டிட சூழலியல் இணை பீடாதிபதி பேராசிரியர் பாஸ்கரன் தெரிவிக்கையில் '' டெக்கின் கிளவுட் கம்பஸானது அழகியல் கம்பஸ் அனுபவத்தை வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்குவதுடன் அதே வேளை அவுஸ்திரேலிய பீட அடிப்படையில் நேருக்கு நேரான உண்மையான தொடர்புகள் உட்பட வளங்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தின் மேலுமொரு சிறப்பம்சமானது SLTC யின் மூலம் செயற்கை அறிவுத்திறனுக்கான இளமாணி பட்டதாரி நெறிக்கு அனுமதி வழங்கப்பட்டதானது இந்த துறையில் அர்ப்பணிக்கப்பட்ட பட்டதாரி நெறியினை வழங்கும் முதலாவது இலங்கை கல்வியகம் எனும் வரலாற்றுக்கு இடமளிப்பதாகும்.''

Comments