பங்குத்தரகர் நிறுவனங்களுக்கு வழிகாட்டலை வழங்கும் பங்குப்பரிவர்த்தனை | தினகரன் வாரமஞ்சரி

பங்குத்தரகர் நிறுவனங்களுக்கு வழிகாட்டலை வழங்கும் பங்குப்பரிவர்த்தனை

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் ஆலோசனையுடன் உடனடியாக அமுல்ப்படுத்தப்பட வேண்டிய சிறந்த வழக்கங்கள் தொடர்பான வழிகாட்டற் தொகுதியொன்றினை பங்குத்தரகர்களுக்காக வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டல் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் 2021 ஜனவரி 13 ஆம் திகதி அனுமதியளிக்கப்பட்டதோடு பங்குத்தரகர் நிறுவனங்களின் உயர்மட்ட நிருவாகத்தினர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இந்த வழிகாட்டல்களின் கீழ், பங்குத்தரகர் நிறுவனங்களின் வேண்டுதலுக்கு அமைவாக, பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்களுடனான 30% தரகுக் கட்டண பகிர்வினை துறைக்குள் நிலையாக பேணும் முகமாக மூன்று மாத தயவு காலம் வழங்கப்படும். 

அனுமதியளிக்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு அமைவாக, வாடிக்கையாளர் ஒருவருக்கு கடன் வசதிகளை அதிகரிப்பதற்கு முன்னர் பங்குத்தரகர் நிறுவனம் வாடிக்கையாளரின் கடன் தகைமைப்பாட்டினை மதிப்பிடுதல் அவசியமாகும்.
வாடிக்கையாளரின் கொள்வனவு சக்தியினை தீர்மானிப்பதற்கான படிமுறைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும், ஒவ்வொரு பிணை தொடர்பான இடர்நேர்கை மட்டத்தினையும் கவனத்திற் கொண்டு வாடிக்கையாளரின் கடன் தகைமைப்பாடு மதிப்பிடப்படுதல் வேண்டும்.  

கணக்குக் கூற்று மற்றும் முதலீட்டுத் தேக்க நிலைமை போன்றவற்றை அவதானிக்கக் கூடியவாறான வசதிகளைக் கொண்டிராத வாடிக்கையாளர்களுக்கும் இணைய வழி வியாபாரத் தளத்தினை விஸ்தரிப்பு செய்வதற்கு பங்குத்தரகர் நிறுவனங்கள் அறிவுறுத்தப்படுகினறன.

மேலும் நிலுவையினை அறியப்படுத்தக்கூடிய வகையில் இலத்திரனியல் வடிவிலான அறிவித்தல்கள் இருவாரத்திற்கொரு முறை வாடிக்கையாளர்களுக்கு பங்குத்தரகர் நிறுவனங்களால் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். அத்தோடு கணக்குக் கூற்று பெறுகையினை உறுதிப்படுத்துவதற்கு எழுமாறாக வாடிக்கையாளர்களிடமிருந்து ஒப்புகையினை பங்குத்தரகர் நிறுவனங்கள் பெற்றுக் கொள்வதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றன, விசேடமாக அதிக அளவுகளில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்ட வாடிக்கையாளர்களிடமிருந்து ஒப்புகை பெறப்படுதல் வேண்டும்.  

மேலும், கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பங்குத்தரகர் விதிகளுக்கு அமைவாக வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட கட்டளைகளுடன் தொடர்புடைய தகவல்களை பங்குத்தரகர் நிறுவனங்கள் பேணுதல் அவசியமாகும்.   

Comments