மாணவருக்கான புலமைக் கதிர் | தினகரன் வாரமஞ்சரி

மாணவருக்கான புலமைக் கதிர்

தரம்- 05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி...

தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு வழிகாட்டும் வகையில், பிரதி வெள்ளிக்கிழமை தோறும் தினகரனுடன் உங்கள் கரங்களில் மாதிரி வினாத்தாள் இவ்வாரம் முதல் வெளிவரவிருக்கின்றது. கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் ஆசிரியரும், புலமைப் பரிசில் பரீட்சைக்கான கற்பித்தலில் மிகுந்த அனுபவம் கொண்டவருமான எஸ்.ஏ.சந்திரபவனால் (B.A, Dip.in teach, PGDE) (‘புலரி’ வெளியீட்டாசிரியர்) விசேடமாகத் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்களும், அதற்கான விடைகளும் உங்கள் தினகரனில் எதிர்வரும்19.02.2021 வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு வாரமும் வெளிவரப் போகின்றன. மாணவர்களுக்கான இந்த விசேட மாதிரி வினாத்தாள் தினகரனின் இலவச இணைப்பாகும். கொவிட்19 காரணமாக வீட்டில் தங்கியிருந்தபடி கற்றலில் ஈடுபடுகின்ற தரம் - 05 மாணவர்களுக்கும், அடுத்த வருடத்தில் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றப் போகின்ற தரம் - 04 மாணவர்களுக்கும் தினகரன் ஊடாகக் கிடைக்கின்ற பெரும் வரப்பிரசாதம் இதுவாகுமென்பதில் நாம் மகிழ்ச்சி கொள்கின்றோம். மாணவ மணிகளின் கற்றலுக்கு கைகொடுப்பதில் தினகரன் என்றுமே தனது பணியைத் தொடரும். (எஸ்.ஏ.சந்திரபவன், தொ.பே.இல.0773013062, [email protected]) -_ ஆசிரியர், தினகரன்

Comments