உள்நாட்டு பாற்பண்ணைத்துறைக்கு ஆதரவளிக்க சிறிய தொழிற்துறையை உருவாக்கும் Pelwatte Industries | தினகரன் வாரமஞ்சரி

உள்நாட்டு பாற்பண்ணைத்துறைக்கு ஆதரவளிக்க சிறிய தொழிற்துறையை உருவாக்கும் Pelwatte Industries

இலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, உற்பத்திகள், மேய்ச்சல் முறைகள் மற்றும் கால்நடைகளின் பாலுற்பத்தி திறன்களில் பாதிப்பை ஏற்படுத்தும் பருவகாலம், வானிலை மற்றும் காலநிலையையும் மீறி வருடம் முழுவதும் கால்நடைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்யும் புதிய நோக்குடன் தனது பயணத்தை தொடர்கின்றது. இதன் மூலம் உள்நாட்டு பால் தேவையை பூர்த்தி செய்வதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், உள்ளூர் பாற்பண்ணையாளர்கள், துணை தொழிற்துறைகள் மற்றும் உள்ளூர் மக்களின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்தவும் உறுதிபூண்டுள்ளது.

உள்ளூரில் உள்ள பல பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு இப்போது தங்கள் சொந்த தீவனம் மற்றும் கால்நடை உணவு உற்பத்தி மையங்களை நிறுவுவதற்கு Pelwatte Industries தனது ஆதரவை வழங்கியுள்ளது.இவற்றை நிறுவனம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட உள்ளூர் பாற்பண்ணையாளர்கள் கொள்வனவு செய்து, ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்குத் தேவையான உணவு கிடைப்பதை உறுதிசெய்வதுடன், அதே நேரத்தில் இந்த செயன்முறையில் ஒரு சிறு தொழிற்துறையையும் ஆதரிக்கிறது.

இது தொடர்பில் தனது கருத்தை தெரிவித்த Pelwatte Dairy Industries இன் முகாமைத்துவ பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க, " இத்துறையில் முன்னணி உள்ளூர் நிறுவனமாக, எங்கள் பெறுமதி சங்கிலியின் மிக முக்கியமான கூறுகள் விவசாயிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான தொழில்துறைகள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த காரணத்தினாலேயே Pelwatte Dairy Industries, இந்த ஏழை சமூகங்களின் சமூக-பொருளாதார தரத்தை உயர்த்தும் தீவிர கவனத்துடன், பாலுற்பத்தியாளர்கள் மற்றும் ஆதரவான தொழில்துறைகளின் வாழ்க்கை மற்றும் பணிகளை மேம்படுத்துவதற்கு நாங்கள் பெருமளவில் முதலீடு செய்கிறோம்," என்றார். பயிற்சி போன்ற துணை சேவைகளை வழங்குவதன் மூலம், அவர்கள் உயர் தரமான பால் விநியோக சங்கிலியை உருவாக்குவதை PDIL உறுதி செய்கிறது.

Comments